Saturday, July 31, 2010

வம்புலான்சோலை

தஞ்சை நகரின் வடமேற்குப் பகுதியில் கி.பி.௫ ஆம் நூற்றாண்டு முதல் ஆழ்வார்களின் மங்களாசாசனம் பெற்ற வைணவத் திருப்திகள் பல உள்ளன அப்பகுதிக்கு அன்று முதல் வம்புலான்சோலை என்றே பெயர் வழங்கியுள்ளது. நாலாயிரம் திவ்யப்பிரபஞ்சத்தில் அச்சொல் இடம்பெற்றுள்ளதள இடம்.
சைவ மரபினர்களான மராட்டிய மன்னர்கள் இறந்தால் கைலாச மலைக்கு சென்று சிவபாதம் அடைந்தவர் என்று கூறுவர், கைலாசவாசி என்பதும் உண்டு.

1737 இல் தஞ்சாவூர் கோட்டை அன்னசத்திரத்தில் மகாராசா கைலாசவாசம் செய்தார் என்று இரண்டாம் ரகோசி இறந்த செய்தி குறிப்பிடபெறுகிறது, இறந்தவரை பின்னாளில் இறந்தவரை கைலாசவாசி (ஆங்கிலத்தில் லடே என்பது போல்) என்று பெயருக்கு முன் குறிப்பர். இறந்த அரசர்க்கு கோயில் எடுக்கப்பட்டது உடன்கட்டை ஏறிய அரசியர்க்கும் கோயில் கட்டினர். அரசர்க்கு சிவலிங்கமும், அரசியற்கு உருவசிலையும் வைப்பது வழக்கம், பிரதாப சிங் துளசா இரண்டாம் சரபோசி ஆகியோரின் சமாதிகள் மிகவும் அழகிய வேலை பாடுகளுடன் விளங்குகின்றன. பிஜப்பூர் மொகலாயக் கலைச்சிறப்பை அவைகளில் கண்டு மகிழலாம். சமாதிகள் ஆலயமாகக் கட்டி குடமுழுக்கும் செய்யப்பட்டதாகக் கல்வெட்டு கூறுகிறது.
கைலாசமகாலை பராமரிப்பதற்கென்றே மன்னார்குடி அருகேயுள்ள கோட்டூரில் கோடை நிலங்கள் அழிக்கப்ட்டன.இங்கு பூசை செய்யத் தனி அந்தனற்குலமும் நியமிக்கப்பட்டு இருந்தனர். மராட்டிய மரபிற்கு சொந்தமான கலையழகு உள்ள கைலாசமகால் இன்று தனியார் ஆக்கிரமிப்பால் அழிந்து கொண்டு இருப்பது கவலைக்குரியது


கைலாசமகால்




.

இ‌‌ந்‌தியா‌வி‌ல் பு‌னித‌ம் எ‌ன்றது‌ம் முத‌லி‌ல் நமது ‌நினைவு‌க்கு வருவது க‌ங்கை ந‌திதா‌ன். க‌ங்கை‌யி‌ல் ‌நீராடி த‌ங்களது பாவ‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து ‌விடுபடவேண்டும் என்பதும், இற‌ந்த ‌பி‌ன் த‌ங்களது அ‌‌ஸ்‌தி க‌ங்க‌யி‌ல் கரை‌க்க‌ப்பட வேண்டு‌ம் எ‌ன்றும் கூறுவ‌தி‌ல் இரு‌ந்து அத‌ன் பு‌னித‌த் த‌ன்மை உணரப்படுகிறது.

அதும‌‌ட்டு‌மி‌ன்‌றி க‌ங்கை‌யி‌ல் த‌ங்களது உ‌யிரை ‌விடுபவ‌ர்க‌ள் நேரே இறைவனை அடைவா‌ர்க‌ள்
எ‌ன்ற ந‌ம்‌பி‌க்கையு‌ம் ‌நிலவு‌கிறது. ஆனா‌ல்,இ‌ந்த க‌ங்கை‌க்கு இரு‌க்கு‌ம் அதே
மு‌க்‌கிய‌த்துவ‌ம்,கா‌வி‌ரி‌யி‌ல் இரு‌ந்து ‌பி‌ரி‌ந்து வரு‌ம் ஒரு ‌கிளை ஆறு‌க்கு‌ம் இரு‌க்கு‌ம் எ‌ன்றா‌ல்
ந‌ம்பமுடி‌கிறதா? ஆ‌ம்,வரலாற்றுப் பெருமைமிக்தஞ்சாவூர் நகரில் வாழு‌ம் ம‌க்க‌ள்,அ‌ங்கு‌ள்ள
ராஜாகோ‌ரி எ‌ன்ற சுடுகா‌ட்டை கங்கை கரைக்கு இணையான பு‌னித இடமாகவு‌ம், அதனை ஒ‌ட்டி
ஓடு‌ம் கா‌வி‌ரி‌யி‌ன் ‌கிளை ஆறான வடவாறை பு‌னித ந‌தியாகவு‌ம் கருது‌கி‌ன்றன‌ர். க‌ங்கை‌க்கு ஈடாக
அ‌ல்ல அதையு‌ம் ‌விட ஒரு மட‌ங்கு அ‌திகமாகவே அதனை பு‌னிதமாக‌க் கருது‌கி‌ன்றன‌ர்.
சுடுகாட்டடை ஒட்டிஓடிக்கொண்டிருக்‌கிறது வடவாறு. இந்த நதியினை ம‌ணிமு‌த்தாறு எ‌ன்று‌ம் அழை‌க்‌கி‌ன்றன‌ர்.இது காவிரியின் கிளைஆறுகளிளல் ஒன்று. இந்ஆற்றைத்தான் கங்கைக்குஇணையாஇப்பகுதி மக்கள் கருதுகின்றனர் . இ‌ந்த ஆ‌ற்‌றி‌ல் ஒருவரது அ‌ஸ்‌தி கரை‌க்க‌ப்ப‌ட்டா‌ல் , அவ‌ர் செ‌ய்த பாவ‌ங்க‌ள் அனை‌த்து‌ம் ‌நீ‌ங்‌கி அவரது ஆ‌த்மா நேரே சொ‌ர்க‌த்‌தி‌ற்கு‌ச் செ‌ல்லு‌ம் எ‌ன்பது‌ம் அ‌ங்கு வா‌ழ்பவ‌ர்க‌ளி‌ன் ந‌ம்‌பி‌க்கை.இ‌ந்த ‌விடய‌ங்களை எ‌ல்லா‌ம் த‌ற்போதைய ச‌ந்த‌தி‌யின‌ர் ந‌ம்‌ப மா‌ட்டா‌ர்க‌‌ள். ஆனா‌ல் வயதான‌வ‌ர்க‌ள் இ‌ந்த சுடுகாடு ப‌ற்‌றிய ‌விஷய‌ங்களை ந‌ம்பு‌கி‌ன்றன‌ர். த‌ங்களது மரண‌த்‌தி‌ற்கு‌ப் ‌

பிறகு த‌ங்களது ‌விரு‌ப்ப‌ம் ‌நிறைவேற வே‌ண்டு‌ம் எ‌ன்று‌‌ம் ‌விரு‌ம்பு‌கி‌ன்றன‌ர்.
பல வயதானவ‌ர்க‌ள் , த‌ங்களது ‌பி‌ள்ளைக‌ளிட‌ம்,தா‌ங்க‌ள் இற‌ந்தா‌ல் அ‌ந்த ராஜா கோ‌ரி ‌
சுடுகா‌ட்டி‌ல்தா‌ன் தமது உட‌ல் எ‌ரி‌க்க‌ப்பட வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம், தனது அ‌ஸ்‌தி அ‌ங்கு ஓடு‌ம்
வடவா‌ற்‌றி‌ல்தா‌ன் கரை‌க்க‌ப்பட வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் கூ‌‌றி‌‌யிரு‌ப்பதாக‌க்
கே‌ள்‌வி‌ப்ப‌ட்டு‌ள்ளோ‌ம். அங்கே ஒரேநேரத்தில் 25 பிணங்களைக் கூஎரிக்முடியும்.
இந்சுடுகாட்டில் தஞ்சை இராபரம்பரையினரை எரிப்பதற்கும்,புதைப்பதற்கும் தனி இடம் இருந்தது . .
பிராமணர்களுக்கு தனி சுடுகாடு ,மற்றொறு இராபரம்பரையினராநாயக்கர்களுக்கு தனி சுடுகாடு

6 comments:

  1. அருமையான பதிவு தோழரே....வாழ்த்துகள்

    ReplyDelete
  2. அருமையான பதிவு தோழரே....வாழ்த்துகள் ...please continue

    ReplyDelete
  3. நன்றி குரு, நன்றி சசி

    ReplyDelete
  4. அருமையான பதிவுகள் நண்பரே தங்கள் பனி தொடர வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  5. அருமையான பதிவு. இந்த சில நாட்களுக்கு முன் கேள்வி பட்டேன். இங்கு அதை விட அதிகமான தகவல்கள் கொட்டி கிடக்கின்றன

    ReplyDelete