தஞ்சையின் ஒரு பகுதி.துளசா மன்னர் சின்னக் கோட்டை ( சிவகங்கை பூங்கா ) சேர்ந்த பெரிய தேவாலயத்தில் இருந்தவருக்கு குடி இருக்க இங்கு இடமளித்தார்.அரசரின் குதிரை கட்டும் இடம் சிவராயர் தோட்டம் ஆகியவை இதில் அடங்கும். சுவாடஸ் முதலில் கட்டிய சிலுவை வடிவத் தேவாலயம் இங்கு உள்ளது. சுவாடஸ்ப் பற்றி சரபோசி மன்னர் எழுதிய ஆங்கிலப் பாடல் அதில் பொறிக்கப்பட்டுள்ளது.சுவாட்ஸின் புகழ் வாய்ந்த வண்ண ஓவியம் உள்ளது.
ஜி .யு, போப் குளம் வெட்டியதை தெரிவிக்கும் கல்வெட்டு (1852 ) இங்கு உள்ளது.வேதநாயக சாஸ்திரி வீடு கல்லறை ஆகியன உள்ளன. மராட்டிய காலத்தில் சௌராஷ்டியர்கள் இங்கு குடியேறினர். இங்கு நவநித கிருஷ்ணன் கோயில் விஜயமண்டபம் தியாகராசா கோயில் ஆகியவை உள்ளன.
விசயதசமியில் அம்புசேவை நடைபெறும் சாவடி மகர்நோன்புச்சாவடி ஆனது என்பர், மானம்புசாவடி என்றும் அழைகின்றனர்.
No comments:
Post a Comment