Saturday, July 24, 2010

விண்ணாற்றன்கரை

தஞ்சையின் வடக்கில் கும்பகோணம் செல்லும் வழியில் 5km தொலைவில் உள்ளது. வெண்ணாற்றன்கரை அதன் பழம் பெயர் விண்ணாற்றன்கரை என்பதாகும்.
பகிரதன் கங்கையை உலகிற்குக் கொண்டு வந்தது போல விண்ணன் இந்த ஆற்றை வெட்டினான் என்று சோழமண்டல சதகம் புகழுகிறது.

கண்ணார் உலகில் பகிரதணும்
கண்டு கொணர்ந்தான் கங்கையான் பார்
விண்ணாறு எளிதோ ஆறுதந்த
வேளான் குரிசில் விண்ணை அன்றோ

என்பது சோழமண்டப சதகப் பாடலாகும்.
விண்ணனை
முழங்கு கடல்தானை மூரிக் கடற்படை முறித்தார் மன்னர்
வழங்கும் இடமெல்லாம் தன்புகழே போக்கிய வைவேல் விண்ணன்

என்று யாப்பருங்கலவிருத்தி மேற்கோள் பாடல் கூறுகிறது .
இவன் நாகமணியைப் புலவர்க்கு ஈந்தவன் என்று ஒரு தனிப்பாடல் புகழ்கிறது.

கூர்ந்த வருமையிடைக் கோள் அரவம் ஈன்றமணி
சார்ந்த தனக்களித்தான் வார்ந்ததரு
மேலவை விண்ணனின் மண்ணில் விளங்கும் புகழ் படைத்த
சாலை வின்னுறுக்கு இணையார்தாம்

என்பது பழம்பாடல். இவன் வெட்டிவைத்த ஏரியால் ஓர் ஊர் பெயர் வழங்குகிறது .
பாண்டிய குலாசனி வளநாட்டு ஏரியூர் நாட்டு வின்ன நேரியான மும்முடிச்
சோழநல்லூர் என்பது தஞ்சை பெரியகோயில் கல்வெட்டின் ஒரு பகுதியாகும்.
இங்குள்ள புனித தளங்கள்

தஞ்சைபுரிசுவரர் -ஆனந்தவள்ளி அம்மன் கோயில்
சோழர் காலத்திற்கு முன் குபேரன் பூசிச்ச பழங்கோயில் தஞ்சை நகரின் தலபுராணத்தில் காளிதேவி தாரகாசுரனை
கொன்றபின் முனிவர் முதலானவர்கட்க்கு சூலத்துடன் ஆனந்தத்தை அளித்த திருக்கோலம் ஆனந்தவல்லி இறைவன், தஞ்சை தலத்திற்கு பெயர் கொடுத்து பரமசிவம் தேவியார் நகரகாப்பு தெய்வம்.


பிறகோயில்கள்
விண்ணாற்றின் வடகரையில் தளிகேசுவரர் கோயில் உள்ளது அதற்கு அமிர்தகடேசுவரர் என்றும் பெயர் உள்ளது. இரண்டாம் சரபோசி தங்கை லட்சுமிபாய் ராசமணியின் கணவர் இராமோசி சர்சேராவ் காட்கே எடுத்த கோயில் விண்ணாற்றான் கரையில் உள்ள அழகிய கோயில். இக்கோயிலுக்காக குளம் வெட்டி அக்கிரகாரம் ஒன்று ஏற்படுத்தபட்டது லட்சிமிராஜபுரம்
என்பது அதன் பெயர் . இந்த அக்கிரகாரதாலே விண்ணாற்றான் கரைக்கு தற்போது பள்ளிஅக்கிரகாரம் என்று பெயர் வந்திருக்கலாம்..

3 comments:

  1. அன்புடன் கணேசுக்கு வாழ்த்துகள். நிறைய எழுது. நூல்களிலிருந்து எடுத்துத் தரும் செய்திகளுக்குக் கீழே அந்த நூலைப்பற்றி விவரங்களை எழுதுதல் படிப்பவருக்கு மிகுந்த நன்மையளிக்கும்.

    வாழ்த்துகள். நிறைய எழுது.

    WORD VERIFICATION// இது தேவையில்லை. வந்து படித்தபின் கருத்து எழுதுபவருக்கு இடைஞ்சலாக இரு்ககும்.

    ReplyDelete
  2. Form nw, wen i'm going (or crossing) to these places, ur blog will blink in my mind. good.

    ReplyDelete