1798 இல் ஆங்கிலேயர் இலங்கையில் கண்டியை கைப்பற்றினர் கண்டி அரசர் விக்கிரரமராசசிங் அவர் தாயார் நான்கு மனைவியார் ஐம்பது உறவினர் சிப்பந்திகள் ஆகியோரை படகிலேற்றிச் சென்னைக்கு நாடுகடத்தி அனுப்பிவிட்டனர்.பின்னர் வேலூரில் சில காலம் தங்கிய அவர்கள் தஞ்சை வந்தனர்.தஞ்சை வந்தவர் எண்ணிக்கை 44 பேர் அரசரின் தம்பி கீர்த்திசிம்மராசுவும் அதில் அடங்குவார்,
அவர்கள் தங்கிய இடம் தஞ்சை பழைய மாரியம்மன் கோயில் சாலையில் கண்டி ராஜா அரண்மனை என்று இன்றும் அழைக்கபடுகிறது.அவர்களில் பலர் இறந்ததற்கு மராட்டிய அரச குடும்பத்தினர் சமாதி (கோரி) எழுப்பினர்.
இக்குடும்பத்தைச் சேர்ந்த ராசரத்தினத்தின் சிம்மள கழுகளா தேவி என்பவர் தஞ்சையில் 1839 இல் காலமானார் . கீர்த்தி சிம்மராசாவின் வேண்டுகோளுகிணங்க அவருக்கு ஒரு சமாதி கோயில் எடுக்கப்பட்டது அதை சிங்களநாச்சியார் கோயில் என்பர் .இந்த செய்தி தமிழ்பழ்கலைகழக கல்வெட்டியல் ஆசிரியர் இ.ராசு அவர்களின் நெஞ்சை அல்லும் தஞ்சை புத்தகத்தில் கிடைத்த தகவல்
No comments:
Post a Comment