Monday, July 19, 2010

சோழா

கானல் ஜெரிணி என்பார் 'கால 'என்னும் வடமொழி சொல்லுக்கு கருமை என்று பொருள் என்றும் ,ஆரியர்களுக்கு முன் தென்னாட்டில் வாழ்ந்த கருப்பு நிற மக்களை குறிக்கும் கோள் என்ற சொல்லில் இருந்து சோழா என்ற சொல் தோன்றி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
எல்.வி ராமசாமி என்பார் மொழியியல் வல்லார் கருத்துப்படி ஊ - ஓ மாறும் 'சூழ்' என்னும் சொல்லுக்கு வட்டமிடுதல் சுழற்சி என்ற பொருள் உண்டு. வாட்டமிடுவோர் என்று பொருளில் இருந்து சோழா என்ற சொல் பிறந்திருக்கலாம் என்பார் ,

சோழ நாட்டில் கடற்கரை மிகுதி அங்கு சோழ மிகுதியாக கிடைக்கும் காரணத்தால் இங்குள்ள மக்கள் சோழியர் எனப்பட்டனர்.சோழியர் நாடு சோழ நாடு என்று பெயர் பெற்றது, சோளம் விளைகிற பகுதி சோள நாடு பிறகு சோழ நாடு ஆயிற்று என்பர் . வருண சிந்தாமணி எனும் நூல் சோழநாட்டை சோழமம் என்று கூறுகிறது. சேரா என்னும் திருடரை குறிக்கும் சொல்லில் இருந்து சோழநாடு என்று பெயர் தோன்றி இருக்கலாம் என்பர்.

சோழநாடு சோலைகள் மிகுந்தது 'சோலைநாடு' சோழநாடு ஆகியிருக்கலாம் என்று கருத இடம் உண்டு.

1 comment:

  1. OMG the single word chola is having this much amount of meanings. Good.

    ReplyDelete