பெயர் வரக் காரணமாக சொல்லப்படும் புராணக்கதை. முற்காலத்தில் தஞ்சன் என்னும் அசுரன் இவ்விடத்தில் மக்களை துன்புறுத்திவந்தான். மக்களைக் காக்க அவனை சிவபெருமான் வதம் செய்த இடமாதலால் தஞ்சாவூர் என்று பெயரும், சிவபெருமான் இந்த ஊரில் தஞ்சபுரீஸ்வரர் என்ற திருப்பெயருடன் கோயில் கொண்டுள்ளார். இத்திருக்கோயில் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், பள்ளியக்ரஹாரத்திற்கு அருகில் இருக்கிறது. வைணவ சம்பிரதாயத்தில் இதே புராணம் சிறிது மாற்றப்பட்டு மஹாவிஷ்ணுவே தஞ்சனை அழித்தார் என்றும், அதனால் தஞ்சை மாமணி நீலமேகப்பெருமாளாய் கோயில் கொண்டு இருக்கிறார் என்று நம்பப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம், மேற்கூறிய நீலமேகப்பெருமாள் கோயில் தஞ்சபுரீஸ்வரரின் கோயிலுக்கு நேரெதிரில் உள்ளது.
தஞ்சாவூர் என்ற பெயர் 8-ம் நுற்றாண்டுகளில் உருவாக்கப்பட்ட ஒரு நகராகும் அப்போது இப்பகுதியினை வளமையோடு ஆண்டு வந்த தனஞ்சய முத்தரையரின் பெயரையே இன் நகரம் பெயராக பெற்றது தனஞ்சய ஊர் என்பது மருவி தஞ்சாவூர் என்று பெயராகி நிலைப்பெற்றது என்றும் கூறப்படுகிறது.சிறப்புகள்
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. சோழர்களின் தலைநகரமாய் விளங்கியது. மேலும் உலகப் புகழ் வாய்ந்த பெரிய கோவில் என அழைக்கப் படும் பெருவுடையார் கோயில் அமைந்த நகரம் தஞ்சை.
உலகப் புகழ் பெற்ற சரசுவதி மகால் நூலகத்தைத் தன்னகத்தே கொண்டது. இந்நூலகத்தில் காணக்கிடைக்காத மிக அரிய ஓலைச் சுவடிகள் நூற்றுக் கணக்கில் திரட்டப் பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
உலகில் தமிழுக்கென்று அமைக்கப்பட்ட முதல் பல்கலைக் கழகம் தஞ்சாவூரில் உள்ளது.
தஞ்சாவூர் ஓவியங்களும், கலைத்தட்டுக்களும் உலகப் புகழ் பெற்றவை. மேலும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையும் மிகவும் புகழ் பெற்றது.
கலை மற்றும் பண்பாட்டினை வளர்ப்பதற்காகவும் பாதுகாப்பதற்காகவும் நடுவண் அரசால் அமைக்கப் பட்டுள்ள தென்னகப் பண்பாட்டு மய்யம் தஞ்சாவூரில் தான் அமைந்துள்ளது. இது தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மற்றும் கர்நாடக ஆகிய நான்கு மாநிலங்களை உள்ளடக்கிய தென்னிந்தியாவின் தலைமை மய்யமாகும்.
மெல்லிசைக் கருவிகளான வீணை, மிருதங்கம், தபேலா, தம்புரா போன்றவை இங்கு தான் செய்யப் படுகின்றன.
nice collection
ReplyDeletenandri vj
ReplyDeletewow.. sooper collection. i came to knw all these details in 2013 nly. But u were posted in 2010. gud job.
ReplyDelete