ஆதிகேசவ பெருமாள்
தஞ்சை கொண்டிராஜபாலயத்தில் உள்ள வெங்கடேச பெருமாள் கோயிலின் வளம் வரும் வழியில் தென்பகுதியில் உள்ளவர் ஆதிகேசவ பெருமாள். இவரை பூசித்து வந்தார் ஒரு அர்ச்சகர். இந்தப் பெருமாளுக்கு அரசர் மலர்மாலைகள் முதளியவைககள் பூசைக்காக அனுப்பவது உண்டு. அவ்வப்போது அரசர் தானே சென்று பெருமாளை வழிபடுவதும் உண்டு. ஆனால் தினந்தோறும் செல்லவதில்லை. ஒருநாள் அரண்மனையிலிருந்து சிறந்தமலர்கள் பெருமாளுக்காக அனுப்ப்படிருந்தன. அம்மலர்களின் சிறப்பைகண்ட அர்ச்சகர் அம்மலர்களைத் தன காமக் கிழத்தியாகிய அக்கோயிலின் தேவதாசிக்குக் கொடுத்துவிட்டார். அவளும் அதனை குழலில் சூட்டிகொண்டார். அன்று அரசர் பெருமாளை வலிபடுவத்ர்க்காகப் புறப்பட்டார். இதனை அறிந்த அருச்சகர் தேவதாசியிடம் ஓடிவந்து அவள் கூந்தலிலிருந்து(அரசர் குடுத்த மலரை) மலர்களை எடுத்துக்கொண்டுபோய் ஒரு தட்டிலே வைத்துப் பெருமாளின் பிரசாதமாக அளித்தார். அதனை பெற்றுக்கொண்ட அரசர் அம்மலர்களை கண்களில் ஒற்றிக் கொள்ளப் புகுங்கால் அவற்றில் தலைமயிர் ஒன்று இருக்கக்கண்டார். அதுபற்றி அருச்சகர் வினவ, அவர் " எம் பெருமாளுக்கு கேசம் உண்டு " என்று கூறிவிட்டார்.அரசரும் அடுத்தவாரம் வந்து காணுவதாக கூறிவிட்டுச் சென்றார். அதுமுதல் அருச்சகர் பெருமாளை நோக்கித் தவம்கிடந்தார். குறிப்பிட்ட நாளும் வந்தது. அரசர் வந்து பார்த்தார். அவர் கண்களுக்கு மட்டும்பெருமாளின் கேசம் காணப்பட்டது. அதுமுதல் அப்பெருமாளைக் கேசப்பெருமாள் என்றனர். அப்பெயர் ('கேசி " என்ற அரக்கனைக் கொன்ற) 'கேசவப்பெருமாள் ' என்றாயிற்று என்பர். இவரையே "ஆதிகேசவப் பெருமாள் " என்பார்.
எல்லையம்மன் கோயில் தெரு
எல்லம்மன் என்பது தஞ்சாவூர் கோட்டைக்குள் தெற்க்குவீதியோடு தொடர்புடைய ஒரு தெருவில் உள்ள கோயிலில் எழுந்தருளி இருக்கின்ற இறைவி எனலாம். இதனை எல்லையம்மன் என்பர், இத்தெருவிற்கும் எல்லையம்மன் கோயில் தெரு'என்று பெயர் வழங்கி வருகின்றது. இதனால் பழங்காலத்தில் தஞ்சாவூரின் "மிகப் பலகாலத்தில்
தஞ்சாவூரின் கிழக்கு எல்லையில் காவல் கடவுளாக இத்தெய்வம் இருந்திருக்க வேண்டும்" என்று கருத இடமிருக்கிறது. இத்தெய்வத்தினை ஜமதக்கனி முனிவரின் மனைவி ரேணுகை என்பாருமுளர். இத்தெய்வத்தின் உருவம் மார்புக்கு கீழ் தெரியவில்லை. பாதிமார்பு, கழுத்து, தலை, இவைகளே காணபடுகின்றன. இவ்வுருவத்தின் முழுத்தோற்றம் இவ்வுருவத்தின் பின்னுள்ள சிலையினால் கானக்கிடைகின்றது. இதனை பரசுராமரின் தாய் என்பர்.
தஞ்சாவூரின் கிழக்கு எல்லையில் காவல் கடவுளாக இத்தெய்வம் இருந்திருக்க வேண்டும்" என்று கருத இடமிருக்கிறது. இத்தெய்வத்தினை ஜமதக்கனி முனிவரின் மனைவி ரேணுகை என்பாருமுளர். இத்தெய்வத்தின் உருவம் மார்புக்கு கீழ் தெரியவில்லை. பாதிமார்பு, கழுத்து, தலை, இவைகளே காணபடுகின்றன. இவ்வுருவத்தின் முழுத்தோற்றம் இவ்வுருவத்தின் பின்னுள்ள சிலையினால் கானக்கிடைகின்றது. இதனை பரசுராமரின் தாய் என்பர்.
வல்லம்
பெண்ணால் மட்டுமே தனக்கு அழிவு உண்டாகும்படியான வரம் பெற்ற தஞ்சகாசுரன், தேவர்களை துன்புறுத்தினான். இதனால், கலங்கிய தேவர்கள் சிவனிடம், தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், அம்பிகையை அனுப்பினார். அவள் அசுரனுடன் போரிட்டாள். அசுரன் பல வடிவங்கள் எடுத்து அம்பிகையுடன் சண்டையிட்டான். ஒரு கட்டத்தில் எருமை வடிவம் எடுத்தான். அம்பிகை, அவனை தன் சூலத்தால் குத்தி வதம் செய்தாள். இதனால், அம்பிகைக்கு உக்கிரம் அதிகமானது. முதலில் அசுரனால் துன்பப்பட்ட தேவர்களுக்கு, இப்போது தங்களைக் காக்க வந்த அம்பிகையாலேயே துன்பம் ஏற்பட்டது. மீண்டும் அவர்கள் சிவனை வேண்டினர். சிவன் அம்பிகையை நோக்கி, ""ஏ கவுரி! சாந்தம் கொள்' (கவுரி என்பது அம்பிகையின் ஒரு பெயர்) என்றார். கணவன் சொல் கேட்ட அம்பிகை சாந்தமானாள். இவளுக்கு கரிகாலற்சோழ மன்னன் இங்கு கோயில் எழுப்பினான். சிவன் அழைத்த பெயரிலேயே இவளுக்கு "ஏகவுரியம்மன்' என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் வல்லன் என்ற மன்னன் ஆட்சி செய்ததால் தலத்திற்கு வல்லம் என்றும், அம்பிகைக்கு வல்லத்துக்காளி என்றும் பெயர்கள் ஏற்பட்டது.வரகூர்
மகாவிஷ்ணு, தாமாகத்தோன்றி அருள்புரிந்த தலங்கள் சுயம்வியக்த ÷க்ஷத்ரம் எனப்படும். அவ்வகையில் மகாவிஷ்ணு இங்கு லட்சுமி நாராயணராக எழுந்தருளினார். ஆந்திராவில் வசித்த நாராயண தீர்த்தர் என்ற மகான், தீராத வயிற்று வலியால் பாதிக்கப்பட்டிருந்தார். நோய் தீர பெருமாள் தலங்களுக்கு யாத்திரை வந்தார். இப்பகுதிக்கு வந்தவர் ஓர்நாள் இரவில் நடுக்காவிரி என்ற இடத்திலிருந்த ஒரு விநாயகர் கோயிலில் தங்கினார். அன்றிரவில் அவரது கனவில் தோன்றிய முதியவர் ஒருவர், "நாராயணா! நாளை காலையில் நீ முதலில் காணும் உயிரைப் பின்தொடர்ந்து வா! உன் பிணி தீரும்' என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். மறுநாள் காலையில் நாராயண தீர்த்தர் எழுந்தபோது, அவர் எதிரே ஒரு வெண் பன்றி வந்தது. அதைக்கண்டவர் தான் கனவில் கண்டபடி, பன்றியை பின்தொடர்ந்தார். அது, இக்கோயிலுக்குள் சென்று மறைந்தது. வராக அவதாரம் எடுத்த பெருமாளே, தனக்கு வராகத்தின் வடிவில் வந்து அருள்புரிந்ததை அறிந்த மகான் சுவாமியை வணங்கினார். மகிழ்ச்சியில் சுவாமியைப் போற்றி கீர்த்தனை பாடினார். அப்போது, இங்கிருந்த லட்சுமி நாராயணர் அவருக்கு ருக்மிணி, பாமாவுடன் கிருஷ்ணராகக் காட்சி கொடுத்தார். பாமா அவரிடம், "பக்தா! உம் பரமாத்மா கோபிகையருடன் புரிந்த லீலைகளைப் பாடு!' என்றாள். மகிழ்ந்த நாராயண தீர்த்தர், அவ்வாறே பாடினார். "கிருஷ்ண லீலா தரங்கிணி' என்ற அற்புத பாசுரம் கிடைத்தது. சுவாமி வராகராக காட்சி தந்ததால் ஊருக்கு "வரகூர்' என்ற பெயர் ஏற்பட்டது.
பூமாலை ராவுத்தர்
வெள்ளைப்புள்ளையார் கோயிலுகுக் கிழக்கே சிறிது தூரத்தில் 'பூமரத்தான் கோயில் தெரு' என்கிற ஒரு தெரு இருக்கிறது.அத்தெருவின் கீழப் பகுதியில் "பூ மரத்தான் கோயில்" என்றழைக்கபடும் பூமாலை ராவுத்தர் கோயில் உள்ளது. அக்கோயிலின் உள்ள இறைவன் பெயர் வைத்தியநாதன். மாணிக்கவாசகருக்கு இறைவன் பூமாலை தரித்துக் கொண்டு (அரேபியா நாட்டுக் குதிரைக்காரன் போல) ராவுத்தர் வேடம் புனைந்து கொண்டு நரிகளைப் பரியாக்கிக் கொண்டு இங்கிருந்து தான் மதுரையம்பதிக்கு புறப்பட்டார். அதனால்தான் இவருக்கு 'பூமாலை ராவுத்தர்' என்று பெயருண்டாயிற்று என்பர்
பூமாலை ராவுத்தர்
வெள்ளைப்புள்ளையார் கோயிலுகுக் கிழக்கே சிறிது தூரத்தில் 'பூமரத்தான் கோயில் தெரு' என்கிற ஒரு தெரு இருக்கிறது.அத்தெருவின் கீழப் பகுதியில் "பூ மரத்தான் கோயில்" என்றழைக்கபடும் பூமாலை ராவுத்தர் கோயில் உள்ளது. அக்கோயிலின் உள்ள இறைவன் பெயர் வைத்தியநாதன். மாணிக்கவாசகருக்கு இறைவன் பூமாலை தரித்துக் கொண்டு (அரேபியா நாட்டுக் குதிரைக்காரன் போல) ராவுத்தர் வேடம் புனைந்து கொண்டு நரிகளைப் பரியாக்கிக் கொண்டு இங்கிருந்து தான் மதுரையம்பதிக்கு புறப்பட்டார். அதனால்தான் இவருக்கு 'பூமாலை ராவுத்தர்' என்று பெயருண்டாயிற்று என்பர்
great great
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅடடா! அடடா! மிக மகிழ்ச்சி. தொடர்ந்து நம்ம ஊரை பற்றி எழுதுங்கள்.
ReplyDeleteகமென்ட் போடு முன் word verification எதற்கு ? எடுத்து விடுங்களேன். பல ப்ளாகுகளில் அது வைப்பதில்லை.
word verification eduthu vitten tholare
ReplyDeletegreat piece of writing. all these information are new to me. gud
ReplyDelete