கரந்திட்டான்குடி சுங்கந் தவிர்த்த சோழநல்லூர், குலோத்துங்கச் சோழநல்லூர் எனப் பிற்காலச் சோழர் காலத்தில் வழங்கப்பட்டது. இங்கிருந்த நந்தவனம் கங்கை கொண்ட சோழன் நந்தவனம் எனப் பெயர்பெற்று இருந்தது. இன்னும் கரந்தையில் ஒருபகுதி கரந்தை சுங்காந்திடல் என்று அழைக்கபடுகிறது.
கோடியம்மன்
கரந்தை வடக்கு விண்ணாற்றன்கரை செல்லும் வழியில் கோடியம்மன் கோயில் உள்ளது. கோடியம்மன் வடவாயிற் செல்வி என்றும் தஞ்சை நகரின் காவல் தெய்வம் என்றும் அழைப்பர் .அக்கோயில் சோழர்காலக் கோயில். நந்திமாகாளி என கல்வெட்டில் உள்ளது. ஊர் கோடியில் உள்ள காவல் தெய்வம் என்பதால் இதற்கு கோடியம்மன் எனப் பெயர் வந்து இருக்கலாம்.
great collection of information.
ReplyDelete