Saturday, August 21, 2010
இன்று சிங்கார சென்னைக்கு பிறந்தநாளாம்
Friday, August 20, 2010
Thursday, August 19, 2010
வருகிறது அனைத்து இந்திய பொது மருத்துவ நுழைவு தேர்வு
இந்த மாதிரி ஒன்னு வருதுன்னு எனக்கு தெரிந்ததை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டியது என் கடமை உரிமை, நாம பேசறதால என்ன ஆகா போது மாற்றம் வந்துற போதா நு நீங்க நினைக்கலாம் ஆனா நான் ஒருவன் சொலுவது உங்க காதுக்கு வந்து இருக்கு இப்டி தான் ஒன்னு ரெண்டாகும் ரெண்டு நாளாகும் எட்டாகும் பதினாறு இப்படி போய் அனைவரையும் சென்றடையும் மக்கள் த விழிப்புணர்வு இருக்கு நாம போராடலனா மக்கள் மன்றத்தில் மக்களை சந்திக்க முடியாதுன்னு அப்டிகுற அச்சத்தில் எம்பிக்கள் எம் எல ஏ கல் பேசுவாங்க, ஒரு சட்ட மசோதா விவாத்தில் இருக்கும் போதே அது சரி இல்லனா குரல் குடுக்கணும், தமிழக எம்ம்பிக்கள் பாதுபாங்க அப்டி ஒரு சட்டம் வந்த பாக்கலாம் அப்டி இருந்தா என்ன ஆகும் மக்கள் இத கண்டுகள அப்டின்னு எம்பிக்கள் இத பெரிது படுத்த மாட்டாங்க அப்பறம் சட்டம் வந்த அப்பறம் அய்யயோ வந்துருச்சே நு கால வென்னிற் ஊத்தின மாதிரி கதுரதுல எந்த உபயோகமும் இல்லை வரும் முன் காப்பதே புத்திசாலித்தனம், இந்த சட்டம் தற்காலிகமாக தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது கைவிட படவில்லை அதன் தள்ளி போடங்கனு சும்மா இருந்தா மகளிர் மசோதா நிறை வேற்றேனு மக்கள் கவனத்த திசை திருப்பி, வெளிநாட்டு நிறுவங்கள் அணு உலைகள் இந்தியாவில் வைத்து அதில் ஏதேனும் அசம்பாவிதம் வந்தால் அதற்கான நிவாரணம் வழங்குவதை இந்திய அரசு தான் ஏற்கும் அதற்கு அந்த வெளிநாட்டு நிறுவனம் நிவாரணம் வழங்க வேண்டாம் என்ற சட்டம் இயற்றினார்கள், வெளிநாட்டுக்காரன் இங்க வந்த நம்ம மக்கள் த வேலை வாங்குவான் சம்பாரிபான் ஆனா அதனால அசம்பாவிதம் வந்த அதற்கான நிவாரணம் நம்ம கட்டுகின்ற வரிப்பணத்துல இருந்து குடுப்பான் வெளிநாட்டுகாரன் லாபம் வந்த எடுதுபான் அசம்பாவிதம் நா இந்திய அரசு பணம் குடுக்கணும் என்ன ஒரு கேவலமான சட்டம் இதற்காக ரெண்டாயிரம் கோடி ஒதுக்க பட்டுள்ளது இது எத்தன பேர்க்கு தெரியும்...அதனால நான் ஒன்னும் அவசரபட்டோ இல்ல உணர்ச்சி பெருக்கெடுத்தோ இல்ல எதோ எதிர்ப்பா காட்டி பேர் எடுக்கணும் அப்டிகுற நோக்கத்துல பண்ணல இந்த மசோதாவை பற்றி விழிப்புணர்வு ஏற்ப்படுதவே
இது போன்ற நுழைவுத்தேர்வில் யார் அதிக மதிப்பெண் பெறுவார்கள் கிராமப்புற மாணவனா நகர்புற மாணவனா ?
சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்ல பொறியில் மாணவர் சேர்கை நுழைவுதேர்வு வழியா நடந்தது ஆனா அந்த தேர்வுல எல்லாம் நகர் புற மாணவர்கள் தான் அதிகம் மதிப்பெண் பெற்றாங்க, அதும் இல்லாம அந்த தேர்வ பத்தி விழிப்புணர்வு இல்லாத கிராமங்கள் கூட இருந்தது
இந்த மாதிரி தேர்வுகளுக்கு தனிய பயிற்சி நிறுவனத்துல நகர்புற மாணவர்கள் படிச்சி இந்த தேர்வுக்கு தன்னை தயார்படுதிகிறாங்க ...கிராமபுறத்துல இந்த வசதி இல்ல அதும் இல்லாம கிராமபுரதுல இருந்த நகருக்கு வந்து இந்த பயிற்சி பெற வசதி இல்லாதவங்களும் இரு...காங்க அதனால இந்த நுழைவு தேர்வுல யார் நல்ல திறமைசாலின்னு நு தீர்மானிக்க முடியாது, அனைத்து கிராமப்புறம் நகர்புரதுளையும் சமச்சீர் கல்வி வந்தா தான் இந்த மாத்ரி நுழைவுதேர்வு சாத்தியம், ஏன்னா திடிர்னு கிராமபுறது மாணவனால இந்த தேர்வ எதிர்கொள்ள முடியாது, இந்திய முழுவது ஒன்னாம் வகுப்பில் இருந்து கல்லுரி வரை ஒரே மாதிரியான பாடத்திட்டம் இருந்தான் இந்த நுழைவுதேர்வு நல்ல திட்டம் இல்ல நா தேவையற்றது
தோழமையுடன்
கணேசு அன்பு
Thursday, August 12, 2010
ஆற்றங்கரையில் அஷ்ட நரசிம்மர்கள்!
Saturday, July 31, 2010
வம்புலான்சோலை
Tuesday, July 27, 2010
மகர்நோன்புச்சாவடி
ஜி .யு, போப் குளம் வெட்டியதை தெரிவிக்கும் கல்வெட்டு (1852 ) இங்கு உள்ளது.வேதநாயக சாஸ்திரி வீடு கல்லறை ஆகியன உள்ளன. மராட்டிய காலத்தில் சௌராஷ்டியர்கள் இங்கு குடியேறினர். இங்கு நவநித கிருஷ்ணன் கோயில் விஜயமண்டபம் தியாகராசா கோயில் ஆகியவை உள்ளன.
விசயதசமியில் அம்புசேவை நடைபெறும் சாவடி மகர்நோன்புச்சாவடி ஆனது என்பர், மானம்புசாவடி என்றும் அழைகின்றனர்.
Monday, July 26, 2010
கண்டிராஜா அரண்மனை
அவர்கள் தங்கிய இடம் தஞ்சை பழைய மாரியம்மன் கோயில் சாலையில் கண்டி ராஜா அரண்மனை என்று இன்றும் அழைக்கபடுகிறது.அவர்களில் பலர் இறந்ததற்கு மராட்டிய அரச குடும்பத்தினர் சமாதி (கோரி) எழுப்பினர்.
இக்குடும்பத்தைச் சேர்ந்த ராசரத்தினத்தின் சிம்மள கழுகளா தேவி என்பவர் தஞ்சையில் 1839 இல் காலமானார் . கீர்த்தி சிம்மராசாவின் வேண்டுகோளுகிணங்க அவருக்கு ஒரு சமாதி கோயில் எடுக்கப்பட்டது அதை சிங்களநாச்சியார் கோயில் என்பர் .இந்த செய்தி தமிழ்பழ்கலைகழக கல்வெட்டியல் ஆசிரியர் இ.ராசு அவர்களின் நெஞ்சை அல்லும் தஞ்சை புத்தகத்தில் கிடைத்த தகவல்
Saturday, July 24, 2010
விண்ணாற்றன்கரை
பகிரதன் கங்கையை உலகிற்குக் கொண்டு வந்தது போல விண்ணன் இந்த ஆற்றை வெட்டினான் என்று சோழமண்டல சதகம் புகழுகிறது.
கண்ணார் உலகில் பகிரதணும்
கண்டு கொணர்ந்தான் கங்கையான் பார்
விண்ணாறு எளிதோ ஆறுதந்த
வேளான் குரிசில் விண்ணை அன்றோ
என்பது சோழமண்டப சதகப் பாடலாகும்.
விண்ணனை
முழங்கு கடல்தானை மூரிக் கடற்படை முறித்தார் மன்னர்
வழங்கும் இடமெல்லாம் தன்புகழே போக்கிய வைவேல் விண்ணன்
என்று யாப்பருங்கலவிருத்தி மேற்கோள் பாடல் கூறுகிறது .
இவன் நாகமணியைப் புலவர்க்கு ஈந்தவன் என்று ஒரு தனிப்பாடல் புகழ்கிறது.
கூர்ந்த வருமையிடைக் கோள் அரவம் ஈன்றமணி
சார்ந்த தனக்களித்தான் வார்ந்ததரு
மேலவை விண்ணனின் மண்ணில் விளங்கும் புகழ் படைத்த
சாலை வின்னுறுக்கு இணையார்தாம்
என்பது பழம்பாடல். இவன் வெட்டிவைத்த ஏரியால் ஓர் ஊர் பெயர் வழங்குகிறது .
பாண்டிய குலாசனி வளநாட்டு ஏரியூர் நாட்டு வின்ன நேரியான மும்முடிச்
சோழநல்லூர் என்பது தஞ்சை பெரியகோயில் கல்வெட்டின் ஒரு பகுதியாகும்.
இங்குள்ள புனித தளங்கள்
தஞ்சைபுரிசுவரர் -ஆனந்தவள்ளி அம்மன் கோயில்
சோழர் காலத்திற்கு முன் குபேரன் பூசிச்ச பழங்கோயில் தஞ்சை நகரின் தலபுராணத்தில் காளிதேவி தாரகாசுரனை
கொன்றபின் முனிவர் முதலானவர்கட்க்கு சூலத்துடன் ஆனந்தத்தை அளித்த திருக்கோலம் ஆனந்தவல்லி இறைவன், தஞ்சை தலத்திற்கு பெயர் கொடுத்து பரமசிவம் தேவியார் நகரகாப்பு தெய்வம்.
பிறகோயில்கள்
விண்ணாற்றின் வடகரையில் தளிகேசுவரர் கோயில் உள்ளது அதற்கு அமிர்தகடேசுவரர் என்றும் பெயர் உள்ளது. இரண்டாம் சரபோசி தங்கை லட்சுமிபாய் ராசமணியின் கணவர் இராமோசி சர்சேராவ் காட்கே எடுத்த கோயில் விண்ணாற்றான் கரையில் உள்ள அழகிய கோயில். இக்கோயிலுக்காக குளம் வெட்டி அக்கிரகாரம் ஒன்று ஏற்படுத்தபட்டது லட்சிமிராஜபுரம் என்பது அதன் பெயர் . இந்த அக்கிரகாரதாலே விண்ணாற்றான் கரைக்கு தற்போது பள்ளிஅக்கிரகாரம் என்று பெயர் வந்திருக்கலாம்..
Monday, July 19, 2010
தஞ்சையில் உள்ள சில பகுதிகளின் பெயர்காரனங்கள்-2
கரந்திட்டான்குடி சுங்கந் தவிர்த்த சோழநல்லூர், குலோத்துங்கச் சோழநல்லூர் எனப் பிற்காலச் சோழர் காலத்தில் வழங்கப்பட்டது. இங்கிருந்த நந்தவனம் கங்கை கொண்ட சோழன் நந்தவனம் எனப் பெயர்பெற்று இருந்தது. இன்னும் கரந்தையில் ஒருபகுதி கரந்தை சுங்காந்திடல் என்று அழைக்கபடுகிறது.
கோடியம்மன்
சோழா
எல்.வி ராமசாமி என்பார் மொழியியல் வல்லார் கருத்துப்படி ஊ - ஓ மாறும் 'சூழ்' என்னும் சொல்லுக்கு வட்டமிடுதல் சுழற்சி என்ற பொருள் உண்டு. வாட்டமிடுவோர் என்று பொருளில் இருந்து சோழா என்ற சொல் பிறந்திருக்கலாம் என்பார் ,
சோழ நாட்டில் கடற்கரை மிகுதி அங்கு சோழ மிகுதியாக கிடைக்கும் காரணத்தால் இங்குள்ள மக்கள் சோழியர் எனப்பட்டனர்.சோழியர் நாடு சோழ நாடு என்று பெயர் பெற்றது, சோளம் விளைகிற பகுதி சோள நாடு பிறகு சோழ நாடு ஆயிற்று என்பர் . வருண சிந்தாமணி எனும் நூல் சோழநாட்டை சோழமம் என்று கூறுகிறது. சேரா என்னும் திருடரை குறிக்கும் சொல்லில் இருந்து சோழநாடு என்று பெயர் தோன்றி இருக்கலாம் என்பர்.
சோழநாடு சோலைகள் மிகுந்தது 'சோலைநாடு' சோழநாடு ஆகியிருக்கலாம் என்று கருத இடம் உண்டு.
Thursday, July 15, 2010
தஞ்சையில் உள்ள சில பகுதிகளின் பெயர்காரனங்கள்-1
ஆதிகேசவ பெருமாள்
தஞ்சை கொண்டிராஜபாலயத்தில் உள்ள வெங்கடேச பெருமாள் கோயிலின் வளம் வரும் வழியில் தென்பகுதியில் உள்ளவர் ஆதிகேசவ பெருமாள். இவரை பூசித்து வந்தார் ஒரு அர்ச்சகர். இந்தப் பெருமாளுக்கு அரசர் மலர்மாலைகள் முதளியவைககள் பூசைக்காக அனுப்பவது உண்டு. அவ்வப்போது அரசர் தானே சென்று பெருமாளை வழிபடுவதும் உண்டு. ஆனால் தினந்தோறும் செல்லவதில்லை. ஒருநாள் அரண்மனையிலிருந்து சிறந்தமலர்கள் பெருமாளுக்காக அனுப்ப்படிருந்தன. அம்மலர்களின் சிறப்பைகண்ட அர்ச்சகர் அம்மலர்களைத் தன காமக் கிழத்தியாகிய அக்கோயிலின் தேவதாசிக்குக் கொடுத்துவிட்டார். அவளும் அதனை குழலில் சூட்டிகொண்டார். அன்று அரசர் பெருமாளை வலிபடுவத்ர்க்காகப் புறப்பட்டார். இதனை அறிந்த அருச்சகர் தேவதாசியிடம் ஓடிவந்து அவள் கூந்தலிலிருந்து(அரசர் குடுத்த மலரை) மலர்களை எடுத்துக்கொண்டுபோய் ஒரு தட்டிலே வைத்துப் பெருமாளின் பிரசாதமாக அளித்தார். அதனை பெற்றுக்கொண்ட அரசர் அம்மலர்களை கண்களில் ஒற்றிக் கொள்ளப் புகுங்கால் அவற்றில் தலைமயிர் ஒன்று இருக்கக்கண்டார். அதுபற்றி அருச்சகர் வினவ, அவர் " எம் பெருமாளுக்கு கேசம் உண்டு " என்று கூறிவிட்டார்.அரசரும் அடுத்தவாரம் வந்து காணுவதாக கூறிவிட்டுச் சென்றார். அதுமுதல் அருச்சகர் பெருமாளை நோக்கித் தவம்கிடந்தார். குறிப்பிட்ட நாளும் வந்தது. அரசர் வந்து பார்த்தார். அவர் கண்களுக்கு மட்டும்பெருமாளின் கேசம் காணப்பட்டது. அதுமுதல் அப்பெருமாளைக் கேசப்பெருமாள் என்றனர். அப்பெயர் ('கேசி " என்ற அரக்கனைக் கொன்ற) 'கேசவப்பெருமாள் ' என்றாயிற்று என்பர். இவரையே "ஆதிகேசவப் பெருமாள் " என்பார்.
எல்லையம்மன் கோயில் தெரு
தஞ்சாவூரின் கிழக்கு எல்லையில் காவல் கடவுளாக இத்தெய்வம் இருந்திருக்க வேண்டும்" என்று கருத இடமிருக்கிறது. இத்தெய்வத்தினை ஜமதக்கனி முனிவரின் மனைவி ரேணுகை என்பாருமுளர். இத்தெய்வத்தின் உருவம் மார்புக்கு கீழ் தெரியவில்லை. பாதிமார்பு, கழுத்து, தலை, இவைகளே காணபடுகின்றன. இவ்வுருவத்தின் முழுத்தோற்றம் இவ்வுருவத்தின் பின்னுள்ள சிலையினால் கானக்கிடைகின்றது. இதனை பரசுராமரின் தாய் என்பர்.
வல்லம்
பெண்ணால் மட்டுமே தனக்கு அழிவு உண்டாகும்படியான வரம் பெற்ற தஞ்சகாசுரன், தேவர்களை துன்புறுத்தினான். இதனால், கலங்கிய தேவர்கள் சிவனிடம், தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், அம்பிகையை அனுப்பினார். அவள் அசுரனுடன் போரிட்டாள். அசுரன் பல வடிவங்கள் எடுத்து அம்பிகையுடன் சண்டையிட்டான். ஒரு கட்டத்தில் எருமை வடிவம் எடுத்தான். அம்பிகை, அவனை தன் சூலத்தால் குத்தி வதம் செய்தாள். இதனால், அம்பிகைக்கு உக்கிரம் அதிகமானது. முதலில் அசுரனால் துன்பப்பட்ட தேவர்களுக்கு, இப்போது தங்களைக் காக்க வந்த அம்பிகையாலேயே துன்பம் ஏற்பட்டது. மீண்டும் அவர்கள் சிவனை வேண்டினர். சிவன் அம்பிகையை நோக்கி, ""ஏ கவுரி! சாந்தம் கொள்' (கவுரி என்பது அம்பிகையின் ஒரு பெயர்) என்றார். கணவன் சொல் கேட்ட அம்பிகை சாந்தமானாள். இவளுக்கு கரிகாலற்சோழ மன்னன் இங்கு கோயில் எழுப்பினான். சிவன் அழைத்த பெயரிலேயே இவளுக்கு "ஏகவுரியம்மன்' என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் வல்லன் என்ற மன்னன் ஆட்சி செய்ததால் தலத்திற்கு வல்லம் என்றும், அம்பிகைக்கு வல்லத்துக்காளி என்றும் பெயர்கள் ஏற்பட்டது.வரகூர்
பூமாலை ராவுத்தர்
வெள்ளைப்புள்ளையார் கோயிலுகுக் கிழக்கே சிறிது தூரத்தில் 'பூமரத்தான் கோயில் தெரு' என்கிற ஒரு தெரு இருக்கிறது.அத்தெருவின் கீழப் பகுதியில் "பூ மரத்தான் கோயில்" என்றழைக்கபடும் பூமாலை ராவுத்தர் கோயில் உள்ளது. அக்கோயிலின் உள்ள இறைவன் பெயர் வைத்தியநாதன். மாணிக்கவாசகருக்கு இறைவன் பூமாலை தரித்துக் கொண்டு (அரேபியா நாட்டுக் குதிரைக்காரன் போல) ராவுத்தர் வேடம் புனைந்து கொண்டு நரிகளைப் பரியாக்கிக் கொண்டு இங்கிருந்து தான் மதுரையம்பதிக்கு புறப்பட்டார். அதனால்தான் இவருக்கு 'பூமாலை ராவுத்தர்' என்று பெயருண்டாயிற்று என்பர்
Wednesday, July 14, 2010
தஞ்சையில் உள்ள சில பகுதிகளின் பெயர்காரனங்கள்
அரசன் விஜயராகவா நாயகர் வைணவான காரணத்தால் சைவ உருவாகிய பிள்ளையே வழிபாட்டுக்கு தடைவிதிப்பார் எனக்கருதி, அதற்குப் பதிலாக, ஒரு வெல்ல அச்சினை வைத்து வணங்கி தன பணியினை மேற்கொண்டாராம் இதனை அறிந்த அரசன் அதனை அகற்ற முயன்றபோது அவ்வுரு இப்போது இருக்கும் உருவாக மாறியதாகவும் அதனால் அதற்கு "வெல்ல பிள்ளையார் " என்று பெயரிடதாகவும், அது "வெள்ளை பிள்ளையார் " என்று ஆனது என ஒரு கர்ண பரம்பரை செய்தி இருக்கிறது.இந்நகரில் எல்லையில் அமைக்கப்பட்டதால்
இதற்கு "எல்லை பிள்ளையார்" என்று பெயரிட்டு, அது கால வழக்கில் வெள்ளை பிள்ளையாராக மாறியதாகவும் கூறுவர்.
"வல்லப்பை" என்ற அம்பிகையோடு காட்சியளிபதாள் இவருக்கு "வல்லபைப் பிள்ளையார்" என்று பெயருண்டாயிற்று. அது கால போக்கில் "வெள்ளை பிள்ளையார்" பிள்ளையார் மட்டும் கருவறைக் கடவுளாக காட்சி அளிக்கிறார். வல்லபைக்குக் கருவறை உருவம் இல்லை. இதை நுலாசிரியார்
"வனக்கிளியே தஞ்சைவெள்ளை வாரனத்தார் நாளை
வலிமையிலே அசுரர்பெண்ணை மணம்புணர் வா ரம்மே "
கருடங்கோட்டை
புன்னைநல்லூர் .
வரலாறு :
கீர்த்தி சோழன் என்னும் அரசர் இவ்வம்பிகையின் அருளால் ஒரு ஆண்மகனைப் பெற்று அதற்கு தேவசோழன் என்னும் பெயரைச் சூட்டி அவன் பல ஆண்டுகள் சோழ சாம்ராஜ்யத்தை ஆண்டு வந்தான். தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜா 1680 ல் திருத்தல யாத்திரை செய்யுங்கால் கண்ணபுரம் என்னும் சமயபுரத்தில் தங்கி வழிபாடு செய்தார். அன்றிரவு அம்பிகை அரசனின் கனவில் தோன்றி, தஞ்சைக்கு கிழக்கே 7 கி.மீ. தூரத்தில் உள்ள புன்னைக் காட்டில் புற்று உருவாய் உள்ள தன்னை வந்து சேவிக்கும்படி கூறவே, அவ்வரசன் தலைநகராகிய தஞ்சைக்கு வந்து புன்னைக் காட்டிற்கு வழியமைத்து, அம்பிகை இருப்பிடத்தைக் கண்டு சிறிய கூரையமைத்து, புன்னைநல்லூர் என்று பெயரிட்டு அக்கிரமத்தையும் ஆலயத்திற்கு வழங்கினார்.1728 1735 ல் தஞ்சையை ஆண்ட துளஜா ராஜாவின் புதல்வி வைசூரியால் கண் பாதிக்கப்பட்டு இந்த அம்பிகையை வழிபட்டு குணமானாள். அம்பிகையின் அருளை எண்ணி அவ்வரசன் அம்பிகைக்கு சிறிய கோயிலாக கட்டினார்.காலப்போக்கில் இது இவ்வளவு கோயிலாக மாறியது என்று வரலாறு கூறுகிறது.
வடுவூர்
எனும் பொருளில் வடிவு +ஊர் என அழைக்கப்படுகிறது. அந்த காலத்தில் மகிழ மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் மகிழங்காடு, வெகுளாரண்யம் என்றும், பாஸ்கர ஷேத்திரம், தக்ஷிண அயோத்தி, ஏகாதசி கிராமம் என பல்வேறு பெயர்களும் உண்டு என்கிறார்கள் இந்த ஊர் பற்றி ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள்.
திருவையாறு
நல்லாறும், பழையாறும், கோட்டாற் றொடு
நலந்திகழும் நாலாறும், திருவையாறும், தெள்ளாறும் ...
என்று தனது திருப்பதிகத்தில் திருநாவுக்கரசர் கூறுகிறார்.
திருவையாற்றுக்கு பஞ்சநதம், பூலோக கைலாசம், ஜெப்பேசம், ஜீவன் முக்திபுரம் எனப் பல பெயர்கள் உண்டு என்று கூறுகிறார்கள். 'ஐ' என்றால் மேலான, உயர்வான என்றும் 'ஆறு' என்பதற்கு வழிகள், மார்க்கங்கள் என்றும் பொருள் உண்டு. இவற்றை மூலாதாரம், ஸ்வாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை எனும் ஆறு ஆதாரங்கள் என்றும் சொல்லுகிறார்கள். இப்படிப் பலப்பல பெயர்க்காரணங்கள் கூறப்பட்டாலும், திருவையாறு எனும் பெயர் பல நூற்றாண்டுகளாக நிலைபெற்றுவிட்டது.
இத்திருத்தலத்தைக் குறித்துப் பாடப்பெற்று நமக்குக் கிடைக்ககூடிய நூல்கள் அனைத்துமே சைவ இலக்கியங்கள்தான். தேவாரம் பாடிய மூவர் காலம் முதல் இன்றுவரை இத்தலம் மிகச் சிறந்த சைவத் தலங்களுள் ஒன்றாக போற்றப்படுகிறது. திருப்புகழிலும் அருணகிரிநாத சுவாமிகள் இத்தலைத்தைப் போற்றிப் பாடியுள்ளார். மாணிக்கவாசகர் பெருமானும் 'திருவாசகம்' கீர்த்தித் திருவகவலில் "ஐயாறதனில் சைவனாகியும்" என்று இங்கு சிவபெருமான் தனக்கு பூசை செய்யும் ஆதிசைவர் காசிக்குச் சென்றிருந்தபோது அவர் உருவில் வந்து தனக்கே பூசித்த வரலாற்றைக் குறிப்பிடுகிறார்.
தல வரலாறு:
குபேரன் தஞ்சாவூருக்கு பயணமாகி சிவனை வழிபட்டதாக ஒரு தகவல் உண்டு. தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர் கோயில் (பெரிய கோயில்) கட்டப்படுவதற்கு முன்னதாக ஊர் எல்லையில், ஒரு சிவன் கோயில் இருந்தது. இங்குள்ள இறைவன் "தஞ்சபுரீஸ்வரர்' எனப்பட்டார்.
ராவணன், தான் பெற்ற தவவலிமையால், குபேரனிடமிருந்த செல்வத்தைப் பறித்துக் கொண்டான். செல்வமிழந்த குபேரன், மீண்டும் செல்வம் பெற பல சிவன் கோயில்களுக்கும் சென்றான்.
இறுதியில் தஞ்சாவூர் தலத்துக்கு வந்து இங்குள்ள சிவனிடம் தஞ்சமடைந்தான். தன்னிடம் தஞ்சம் புகுந்தவர்களைக் காப்பாற்றும் வல்லமையுள்ள சிவன் இக்கோயிலில் தஞ்சபுரீஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இவரது பெயராலேயே இவ்வூருக்கு "தஞ்சவூர்' என்ற பெயர் எற்பட்டு காலப்போக்கில் "தஞ்சாவூர்' ஆனதாக தல புராணம் குறிப்பிடுகிறது. குபேரபுரீஸ்வரர் என்ற திருநாமமும் சுவாமிக்கு உண்டு.
தஞ்சாவூரில் மேல ராஜவீதியும், வடக்கு ராஜவீதியும் இணையும் வடமேற்கு மூலையில் வாயுவின் மைந்தனுக்கு வாஸ்துப்படி தஞ்சை மன்னனால் கட்டப்பட்டது ஸ்ரீபிரதாப வீர அனுமார் திருக்கோயில். இக்காரணத்தினாலேயே பக்தர்கள் பலகாலமாக "மூலை அனுமார் கோயில்' என்று இவ்வாலயத்தை அழைத்து வருகின்றனர். தற்போது அப்பெயரே நிலைத்துவிட்டது.
.
| ||
பராசரர் எனும் மகரிஷி பாற்கடலில் கிடைத்த அமிர்தத்தை, மணிமுக்தா நதியில் இட்டு அதன் கரையில் ஆசிரமம் அமைத்து தவம் செய்து வந்தார். அப்போது சிவனிடம் சாகா வரம் பெற்ற தஞ்சகன், தண்டகன், தாராசுரன் எனும் மூன்று கொடிய அசுரர்கள் பராசரையும், அவருடன் தவம் செய்து வந்த முனிவர்களையும் தொந்தரவு செய்தனர். பராசரர் அவர்களிடம் அசுர குணங்களை விட்டுவிடும்படி சொல்லிப் பார்த்தார். அவர்களோ கேட்பதாக இல்லை. எனவே அசுரர்களை அழிக்கும்படி சிவனிடம் வேண்டினார் பராசரர். சிவன் மாயா சக்தியாக காளிதேவியை அனுப்பி அசுரர்களை வதம் செய்தார். ஆனால், அசுரர்கள் மூவரும் அமிர்தம் கலந்திருந்த தீர்த்தத்தை பருகி மீண்டும், மீண்டும் உயிர் பெற்று முனிவர்களை கொடுமைப்படுத்தினர். கலக்கமடைந்த பராசரர் மகாவிஷ்ணுவிடம் வேண்டினார். மகாவிஷ்ணு அசுரர்களை அழிக்க சென்றார். அப்போது தஞ்சகன் யானை வடிவம் எடுக்கவே, மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து வீழ்த்தினார். அவனை கொல்வதற்காக தன் மடியில் கிடத்தினார். மகாவிஷ்ணுவின் திருமேனியில் கிடத்தப்பட்டவுடன் தஞ்சகனுக்கு ஞானம் பிறந்தது. அசுர குணங்கள் ஒழியப்பெற்ற அவன் மகாவிஷ்ணுவிடம், ""எனக்காக நரசிம்மராக வந்த நீங்கள் இங்கேயே தங்கி மக்களுக்கும் அருள வேண்டும், எனது பெயராலேயே இத்தலமும் அழைக்கப்பட வேண்டும்'' எனக் கேட்டான். அவரும் அருள்புரிந்தார். அவனது பெயரால் இத்தலம் "தஞ்சமாபுரி' எனப்பட்டது.தஞ்சகனின் அழிவைக்கண்ட தண்டகன், பூமியை பிளந்து கொண்டு தப்பித்துச் சென்றான். மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமிக்குள் சென்று அவனை அழித்தார். பின் காளியை அனுப்பி தாரகனை வதம் செய்ய அருளினார். மூன்று அசுரர்களும் அழிக்கப்பட்ட பிறகு அவர் பராசரருக்கு நீலமேகப்பெருமாளாக காட்சி தந்தார். இவர் மூன்று திருநாமங்களில் தனித்தனி கோயில்களில் இத்தலத்தில் அருள்புரிகிறார்.
கருந்திட்டைக்குடி /கரந்தை
தஞ்சை வெள்ளை பிள்ளையார் குறவஞ்சி நூலில் குறிப்பிட்டு உள்ளனர். தற்போது இந்த பகுதி கரந்தை என்றி அழைக்கபடுகிறது
தொப்புள் புள்ளையார் கோயில்
களிமேடு
கொண்டிராஜபாளையம் ரகுநாதப்பெருமால்(நரசிம்மப்பெருமாள்) கோயிலின் திண்ணையில் கடைவைத்து இருந்த "பெத்ததாசர்" என்பவர் வைணவப்பற்று மிக்கவர். இந்தக்கடவுளை இடையறாது பூசித்து வந்தாராம். திருநாமம் தரித்து வந்தவர்களை கண்டவுடன் எழுந்து அவர்களை வலம் வந்து வணங்கிவிட்டு பிறகு தான் தன் செயலை மேற்கொள்வாராம் அது கேட்டு அக்கால அரசர் அவரை பரிகாசிக்க எண்ணித் தன் அரசவையில் இரண்டு கழுதைகளை கொணர்ந்து ஒன்றிற்கு திருமண் அணிவித்து, மற்றொன்றை வெறும் நெற்றியோடு நிறுத்திக்கொண்டு பெத்தராசரை அழைத்துவரச் சொன்னாராம்.அவர் வந்து திருமண் தரித்த கழுதையினை வலம்வந்து, விழுந்து வணங்கி எழுந்து அரசரது ஏவலுக்குக் காத்திருந்தாராம்."இந்தக் கழுதையினை ஏன் வணங்கவில்லை" என்று கேட்ட அரசருக்கு "இது (திருமண் தரிகாதது) உன்னை ஒத்த கழுதை, அது(திருமண் தரித்தது) என்னை ஒத்த கழுதை" என்று பதிலளிக்கவே கோபம் கொண்ட அரசர் இவரைக் கழுவேற்றப் பணித்தாராம்.
தஞ்சைக்கு மேற்கே சுமார் மூன்று கல் தொலைவில் உள்ள ஒரு மேட்டில் இருந்த கழுவருகில் இவர் அழைத்துச் சொல்லப்பட்டாராம், இவரை அழைத்துச்செல்லும்போது இவர் வழிநெடுகிலும் "நரசிம்மா""நரசிம்மா"
இவரை கழுவேற்ற இருந்த பகுதியை இவருக்கு இனாமாக வழங்கியதாக கூறுவர்.இவரை கழுவேற்ற அமைத்த மேடு "களிமேடு " ஆயிற்றேன்பர்.கழுதை காரணமாக இவருக்கு கொடுக்கப்பட்ட மேடு "கழுதை மேடு " ஆது களிமேடாயிற்று " என்பர்.
தஞ்சாவூர்
பெயர் வரக் காரணமாக சொல்லப்படும் புராணக்கதை. முற்காலத்தில் தஞ்சன் என்னும் அசுரன் இவ்விடத்தில் மக்களை துன்புறுத்திவந்தான். மக்களைக் காக்க அவனை சிவபெருமான் வதம் செய்த இடமாதலால் தஞ்சாவூர் என்று பெயரும், சிவபெருமான் இந்த ஊரில் தஞ்சபுரீஸ்வரர் என்ற திருப்பெயருடன் கோயில் கொண்டுள்ளார். இத்திருக்கோயில் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், பள்ளியக்ரஹாரத்திற்கு அருகில் இருக்கிறது. வைணவ சம்பிரதாயத்தில் இதே புராணம் சிறிது மாற்றப்பட்டு மஹாவிஷ்ணுவே தஞ்சனை அழித்தார் என்றும், அதனால் தஞ்சை மாமணி நீலமேகப்பெருமாளாய் கோயில் கொண்டு இருக்கிறார் என்று நம்பப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம், மேற்கூறிய நீலமேகப்பெருமாள் கோயில் தஞ்சபுரீஸ்வரரின் கோயிலுக்கு நேரெதிரில் உள்ளது.
தஞ்சாவூர் என்ற பெயர் 8-ம் நுற்றாண்டுகளில் உருவாக்கப்பட்ட ஒரு நகராகும் அப்போது இப்பகுதியினை வளமையோடு ஆண்டு வந்த தனஞ்சய முத்தரையரின் பெயரையே இன் நகரம் பெயராக பெற்றது தனஞ்சய ஊர் என்பது மருவி தஞ்சாவூர் என்று பெயராகி நிலைப்பெற்றது என்றும் கூறப்படுகிறது.சிறப்புகள்
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. சோழர்களின் தலைநகரமாய் விளங்கியது. மேலும் உலகப் புகழ் வாய்ந்த பெரிய கோவில் என அழைக்கப் படும் பெருவுடையார் கோயில் அமைந்த நகரம் தஞ்சை.
உலகப் புகழ் பெற்ற சரசுவதி மகால் நூலகத்தைத் தன்னகத்தே கொண்டது. இந்நூலகத்தில் காணக்கிடைக்காத மிக அரிய ஓலைச் சுவடிகள் நூற்றுக் கணக்கில் திரட்டப் பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
உலகில் தமிழுக்கென்று அமைக்கப்பட்ட முதல் பல்கலைக் கழகம் தஞ்சாவூரில் உள்ளது.
தஞ்சாவூர் ஓவியங்களும், கலைத்தட்டுக்களும் உலகப் புகழ் பெற்றவை. மேலும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையும் மிகவும் புகழ் பெற்றது.
கலை மற்றும் பண்பாட்டினை வளர்ப்பதற்காகவும் பாதுகாப்பதற்காகவும் நடுவண் அரசால் அமைக்கப் பட்டுள்ள தென்னகப் பண்பாட்டு மய்யம் தஞ்சாவூரில் தான் அமைந்துள்ளது. இது தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மற்றும் கர்நாடக ஆகிய நான்கு மாநிலங்களை உள்ளடக்கிய தென்னிந்தியாவின் தலைமை மய்யமாகும்.
மெல்லிசைக் கருவிகளான வீணை, மிருதங்கம், தபேலா, தம்புரா போன்றவை இங்கு தான் செய்யப் படுகின்றன.