இது போன்ற பொது நுழைவுத்தேர்வு மேலோட்டமாக பார்க்கும் போது நல்ல விடயமாக தெரிந்தாலும் இதனால் பெரிதும் பாதிக்க போவது தமிழ் நாட்டு மக்கள் தான் ஏன் என்றால் தமிழ்நாட்டில் பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் அதிகம் அதே நேரத்தில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது கல்வியின் தரம் தமிழகத்தில் தான் நன்றாக உள்ளது. அதனால் தான் மற்ற மாநில மக்கள் அதிகம் தமிழகத்தில் வந்து படிக்கின்றனர், இது போன்ற நுழைவுத் தேர்வு வந்தால் போட்டிகள் அதிகமாகும் இதனால் பாதிக்கபோவது யார் கிராமபுற மாணவர்கள்தான். இது போன்ற நுழைவுத்தேர்வு வந்தால் கிராம புற மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பு எட்டா கனியாகிவிடும். ஏன் என்றால் பெருநகர மக்களுக்கு இது போன்ற தேர்வுகளுக்கான விழிப்புணர்வு அதிகம் அதுவும் இல்லாமல் இந்த தேர்வுக்கான பயிற்சி நிறுவங்களில் சேர்ந்து படிப்பார்கள் ஆனா கிராமப்புற மாணவர்களுக்கு இதை பற்றி தெரிந்து கூட இருக்காது. இது போன்ற தேர்வுகளால் மருத்துவம் வியாபாரமாவதை தடுக்கலாம் என்று அரசு கூறினால் அதை மக்கள் நம்பிவிட கூடாது ஏன் என்றால் முறைகேடு இல்லாத இடம் ஏது இந்தியாவில் ????? வேண்டும் என்றால் அனைத்து மருதவக்கல்லுரிகளையும் மதிய அரசு தன ஆளுமையில் கீழ் கொண்டு வந்து முறைபடுத்தட்டும் ஆனால் அந்த அந்த மாநில மாணர்வர்களுக்கு அவர்களின் மாநிலத்தில் தான் முக்கியத்துவம் தர வேண்டும், ஒரு மாநிலத்தில் அந்த மாநில மாணவர்கள் இணைந்து முடித்த பிறகு மீதம் இடம் இருந்தால் வேறு மாநில மாணவரை சேர்த்துக்கொள்ளலாம் என்று சட்டத்தில் குறிப்பிட வேண்டும் அப்போது தான் அனைத்து மாநில மக்களின் உரிமையும் பாதுகாக்க படும். ஆகவே மத்திய அரசு ஒன்று இந்த சட்டத்தை நிறைவேற்றாமல் இருக்க வேண்டும் இல்லை அந்த அந்த மாநில மாணவர்களுக்கு அந்த அந்த மாநிலத்தில் முக்கியத்துவம் தரப்படும் மீதம் இடம் இருந்தால் மட்டும் மற்ற மாநில மாணவரை அனுமதிக்கலாம் என்ற வரியை அந்த சட்டத்தில் இணைக்க வேண்டும் ..........
இந்த மாதிரி ஒன்னு வருதுன்னு எனக்கு தெரிந்ததை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டியது என் கடமை உரிமை, நாம பேசறதால என்ன ஆகா போது மாற்றம் வந்துற போதா நு நீங்க நினைக்கலாம் ஆனா நான் ஒருவன் சொலுவது உங்க காதுக்கு வந்து இருக்கு இப்டி தான் ஒன்னு ரெண்டாகும் ரெண்டு நாளாகும் எட்டாகும் பதினாறு இப்படி போய் அனைவரையும் சென்றடையும் மக்கள் த விழிப்புணர்வு இருக்கு நாம போராடலனா மக்கள் மன்றத்தில் மக்களை சந்திக்க முடியாதுன்னு அப்டிகுற அச்சத்தில் எம்பிக்கள் எம் எல ஏ கல் பேசுவாங்க, ஒரு சட்ட மசோதா விவாத்தில் இருக்கும் போதே அது சரி இல்லனா குரல் குடுக்கணும், தமிழக எம்ம்பிக்கள் பாதுபாங்க அப்டி ஒரு சட்டம் வந்த பாக்கலாம் அப்டி இருந்தா என்ன ஆகும் மக்கள் இத கண்டுகள அப்டின்னு எம்பிக்கள் இத பெரிது படுத்த மாட்டாங்க அப்பறம் சட்டம் வந்த அப்பறம் அய்யயோ வந்துருச்சே நு கால வென்னிற் ஊத்தின மாதிரி கதுரதுல எந்த உபயோகமும் இல்லை வரும் முன் காப்பதே புத்திசாலித்தனம், இந்த சட்டம் தற்காலிகமாக தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது கைவிட படவில்லை அதன் தள்ளி போடங்கனு சும்மா இருந்தா மகளிர் மசோதா நிறை வேற்றேனு மக்கள் கவனத்த திசை திருப்பி, வெளிநாட்டு நிறுவங்கள் அணு உலைகள் இந்தியாவில் வைத்து அதில் ஏதேனும் அசம்பாவிதம் வந்தால் அதற்கான நிவாரணம் வழங்குவதை இந்திய அரசு தான் ஏற்கும் அதற்கு அந்த வெளிநாட்டு நிறுவனம் நிவாரணம் வழங்க வேண்டாம் என்ற சட்டம் இயற்றினார்கள், வெளிநாட்டுக்காரன் இங்க வந்த நம்ம மக்கள் த வேலை வாங்குவான் சம்பாரிபான் ஆனா அதனால அசம்பாவிதம் வந்த அதற்கான நிவாரணம் நம்ம கட்டுகின்ற வரிப்பணத்துல இருந்து குடுப்பான் வெளிநாட்டுகாரன் லாபம் வந்த எடுதுபான் அசம்பாவிதம் நா இந்திய அரசு பணம் குடுக்கணும் என்ன ஒரு கேவலமான சட்டம் இதற்காக ரெண்டாயிரம் கோடி ஒதுக்க பட்டுள்ளது இது எத்தன பேர்க்கு தெரியும்...அதனால நான் ஒன்னும் அவசரபட்டோ இல்ல உணர்ச்சி பெருக்கெடுத்தோ இல்ல எதோ எதிர்ப்பா காட்டி பேர் எடுக்கணும் அப்டிகுற நோக்கத்துல பண்ணல இந்த மசோதாவை பற்றி விழிப்புணர்வு ஏற்ப்படுதவே
இது போன்ற நுழைவுத்தேர்வில் யார் அதிக மதிப்பெண் பெறுவார்கள் கிராமப்புற மாணவனா நகர்புற மாணவனா ?
சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்ல பொறியில் மாணவர் சேர்கை நுழைவுதேர்வு வழியா நடந்தது ஆனா அந்த தேர்வுல எல்லாம் நகர் புற மாணவர்கள் தான் அதிகம் மதிப்பெண் பெற்றாங்க, அதும் இல்லாம அந்த தேர்வ பத்தி விழிப்புணர்வு இல்லாத கிராமங்கள் கூட இருந்தது
இந்த மாதிரி தேர்வுகளுக்கு தனிய பயிற்சி நிறுவனத்துல நகர்புற மாணவர்கள் படிச்சி இந்த தேர்வுக்கு தன்னை தயார்படுதிகிறாங்க ...கிராமபுறத்துல இந்த வசதி இல்ல அதும் இல்லாம கிராமபுரதுல இருந்த நகருக்கு வந்து இந்த பயிற்சி பெற வசதி இல்லாதவங்களும் இரு...காங்க அதனால இந்த நுழைவு தேர்வுல யார் நல்ல திறமைசாலின்னு நு தீர்மானிக்க முடியாது, அனைத்து கிராமப்புறம் நகர்புரதுளையும் சமச்சீர் கல்வி வந்தா தான் இந்த மாத்ரி நுழைவுதேர்வு சாத்தியம், ஏன்னா திடிர்னு கிராமபுறது மாணவனால இந்த தேர்வ எதிர்கொள்ள முடியாது, இந்திய முழுவது ஒன்னாம் வகுப்பில் இருந்து கல்லுரி வரை ஒரே மாதிரியான பாடத்திட்டம் இருந்தான் இந்த நுழைவுதேர்வு நல்ல திட்டம் இல்ல நா தேவையற்றது
தோழமையுடன்
கணேசு அன்பு
நல்ல தகவல் பதிவு......வாழ்த்துகள் நண்பா
ReplyDeleteநன்றி நண்பா
ReplyDelete