Wednesday, May 15, 2013

ராசராசனின் அரண்மனை இருந்த இடம் எது?





தற்பொழுது தஞ்சையில் உள்ள அரண்மனை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது. அரண்மனையை சூழ்ந்துள்ள நான்கு ராசவீதிகள்,கோட்டை ,அகழி, சூழ்ந்த நகரமே சோழர்கால அரண்மனை இருந்த பகுதி என்று கருதுவது தவறாகும். இன்றைய தஞ்சாவூர் சோழர்காலத் தஞ்சையின் ஒருபகுதியேயாகும். சோழர்கால அரண்மனை தஞ்சை ராஜராஜேச்சரத்திற்கு வடமேற்கே உள்ள சீனிவாசபுரம் சிங்கபெருமாள் குளம் செக்கிமேடு போன்ற பகுதியில் தான் இருந்திருக்க வேண்டும் என்பதை தொல்லியியல் ஆய்வாளர்கள் நம்புகின்றனர் இதனை மெய்பிக்கும் வகையில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு தடையம் கிடைத்தது.


1989 ஆம் ஆண்டு தஞ்சாவூர் சீநிவாசபுரதிற்கு அருகில் உள்ள ராசராசன் நகரில் ஒரு தனியார்க்கு வீடுகட்ட ஒப்பந்தகாரர் ஒருவர் கடைகால் தோண்டினார் அப்பொழுது 10 அடி ஆழத்திற்கு மிக நீண்ட கற்றூண் ஒன்று கல்வெட்டுகளுடன் புதைந்து இருந்தது. கல்வெட்டுகளின் முக்கியத்துவம் உணராத அந்த ஒப்பந்தகாரர் அந்த தூணை 70 துண்டுகளாக உடைத்து, கட்டுமானத்திற்கு பயன்படுத்த தயாராகிவிட்டார் அப்பொழுது இந்த தூணின் அருமை அறிந்த சிலர் அகழ்வாராய்ச்சியாளர் திரு குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களுக்கும் இந்து பத்திரிகையின் நிருபர் திரு வி .கணபதி அவர்களுக்கும் தகவல் அளித்தனர். இவர்கள் இருவரும் உடனே சென்று பார்த்து அப்போதைய தஞ்சை மாவட்ட ஆட்சியர் மச்சேந்திரநாதன் அவர்களின் உதவியுடன் உடைந்த கல் துண்டுகளை கைப்பற்றினார். பிறகு முனைவர் இரா. நாகசாமி இத்துண்டுகளை படித்து இக்கல்வெட்டின் முக்கியத்துவத்தை அறிவித்தார். 


தமிழக மற்றும் இந்திய தொல்லியியல் துறையினர் இக்கல்வெட்டின் துண்டுகளை படியெடுத்து பதிவுசெய்தனர், இப்பொழுது அந்த கல்தூண் தஞ்சை ராஜராஜசோழன் மணிமண்டபத்தில் உள்ள ராசராசன் அருகாட்சியகத்தில் உள்ளது (படத்தை காண்க ) 


இதற்கு முன் கிடைத்த அனைத்து கல்வெட்டுகளும் திருகோவில்களுக்கும் மற்ற அரசு நடவடிக்கைக்கு உரிய சாசனங்கலே, ஆனால் தஞ்சையில் கிடைத்துள்ள இக்கல்வெட்டுப் பாடல்களோ ராசராசனின் புகழை மட்டுமே பாடபடுபவையாக உள்ளன.மேலும் அவரது பிற பட்டபெயர்களை கூறாது மும்மூடிசோழன் என்றே புகழ்கிறது.இக்கல்வெட்டு இடம்பெற்ற இந்த கல்தூண் அவனது அரண்மனையில் தான் இருந்திருக்க வேண்டும் என உறுதியாக நம்பலாம் கல்வெட்டில் இடம்பெற்றுள்ள பாடல்களை பற்றி அடுத்த பதிவில் பார்போம் 


மேற்கூறிய செய்தி குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களின் "தஞ்சாவூர்" நூலில் இருந்து எடுக்க பட்டது

Thursday, April 18, 2013

தஞ்சை ராஜராஜேச்சரம் !!!!!!!


எனது நண்பர் திரு சசி தரன் அவர்கள் நமது தஞ்சாவூர் பக்கத்தை பார்த்துவிட்டு இந்த பக்கத்தை நீங்கள் நடத்துகிறீர்களா??? என்று கேட்டார் நான் எனது நண்பர்களால் தொடங்கப்பட்டது தற்பொழுது இந்த பக்கத்தில் என்னையும் ஒரு நிர்வாகியாக எனது நண்பர்கள் ஆகிவிட்டனர் என்றேன் அதற்க்கு அவர் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்ததுடன் சில அறிவூரைகளையும் வழங்கினார் அது நல்ல பக்கம் இன்னும் தஞ்சையின் வரலாற்றை பற்றி பகிர்ந்தால் அது பக்கத்தின் வளர்சிக்கும் வரலாற்றை பலர்க்கும் சென்று சேர்க்கும் என்று ஒரு அறிவுரை கூறினார் நல்ல அறிவுரை ஆகவே நான் படித்த எனக்கு தெரிந்த சில தஞ்சாவூர் வரலாற்று நிகழ்வுகளை இங்கே தொடர்ந்து எழுதலாம் என்று இருக்கின்றேன் அதற்கு உங்களின் ஆதரவையும் கருத்தையும் தொடர்ந்து தஞ்சாவூர் பக்கத்துக்கு தரவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொண்டு என் பதிவை தொடங்குகிறேன்





தஞ்சை பெரியகோயில் தமிழரின் பாரம்பரியத்தையும் கலை திறமையையும் ஆயிரம் ஆண்டுகளாய் இந்த உலகிற்கு பறைசாற்றி கொண்டு இருக்கிறது, நான் உடையார் நாவல் படித்து இருக்கின்றேன் அதில் இறுதி கட்டத்தில் ராஜராஜ சோழன் இறந்த பிறகு அவரின் ஆவி கரூர் தேவரை சந்திக்க வருவது போலவும் அப்ப்பொழுது கரூர் தேவர் எங்கே செல்கிறாய் என்று கேட்கிறார் அதற்கு நம் சோழன் சொல்கிறார் "சொர்கத்திற்கு செல்கிறேன்" என்று கரூர் தேவர் சொர்கமா எங்கு இருக்கிறது??? என்று கேட்கிறார் அதற்கு சோழன் "என்னுடைய சொர்க்கம் வேறெங்கு இருக்கிறது என்னுடைய தஞ்சை நகரை தவிர வேறுஎங்கும் எனக்கு நிம்மதியும் அமைதியும் கிடைக்காது என்னுடைய தஞ்சைதான் எனக்கு சொர்க்கம் நான் இந்த சொர்கத்தை விட்டு வேறெங்கு செல்வேன்!!!!" என்று சொல்வதாக அந்த காட்சி நகரும் அதற்கு பிறகு இறுதியில் பாலகுமாரன் அவர்கள் நான் மேலே கூறியது பொய் அல்ல உண்மை தஞ்சை பெரியகோயில் இருக்கும் வரை ராஜராஜனின் புகழ் அழியாது நாம் அழிவோம் ஆனால் சோழனின் புகழ் அழியாது பெரியகோவிலின் ஒரு ஒரு கல்லிலும் இன்னும் அவர் உயிர் வாழ்கிறார் தஞ்சையில் பிறக்கும் அனவைரின் உயிரிலும் அவர் இரண்டற கலந்து இருக்கிறார் போற்றுவோம் சோழனின் புகழை என்ற அந்த கதை முடியும் உண்மைதான் ஆயிரம் ஆண்டுகளாய் சோழனின் புகழை பறைசாற்றி கொண்டு தான் இருக்கிறது பெரியகோயில் இன்றும் நம் இதயத்தில் சோழன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் அப்படி பட்ட சிறப்பு வாய்ந்த பெரியகோவிலை பற்றி நாம் முழுவதுமாக தெரிந்து கொண்டோமா??? என்றால் இல்லை அருகில் இருந்தால் அருமை தெரியாது!!! என்பது போல் நம்மில் பலர் அதை ஒரு கோவிலை மட்டுமே பார்கின்றோம் அதை கலைக்கு ஓர் எடுதுக்காடாகவோ அல்லது தமிழரின் பெருமையாகவோ நினைப்பது இல்லை, நாம் மறந்துபோன படிக்க தவறிய அந்த வராலாற்றை இங்கே காண்போம்

சென்ற நூற்றாண்டு வரை இத் திருக்கோவில் வரலாறு மக்களால் தெளிவாக அறியப்பட்டு இருக்கவில்லை.சைவர்களால் திருவிசைப்பா படிக்கப்பட்டு வந்த பொழுதிலும் அதிலுள்ள ராஜராஜேச்சரம் என்னும் தொடர் வரலாற்று உணர்வோடு புரிந்துகொள்ளப்படவில்லை.பெரியகோயில் பற்றி கற்பனை கதைகள் ஏட்டிலும் நாட்டிலும் வழங்கப்பட்டு வந்தன .

கிருமி கண்ட சோழன் என்னும் கரிகாலச் சோழனால் கட்ட பட்டது என்றும் அவனுக்கு இருந்த குட்ட நோய் இங்குள்ள சிவகங்கையில் நீராடியதால் நீங்கியது என்றும் பிரகதீஸ்வர மகாத்மியம் என்னும் வடமொழி புராணமும் தஞ்சை புரி மகாத்மியம் என்னும் மராட்டிய மொழி புராணமும் கூறுகின்றன.ஜி யு போப் காடுவெட்டி சோழன் என்பான் கட்டினான் என எழுதுகிறார்.

1886 ஆம் ஆண்டில் சென்னை அரசாங்கம் ஹீல்ஷ் என்னும் ஜெர்மன் அறிஞரை கல்வெட்டு ஆய்வாளராக நியமித்தது.இவர் பெரியகோயில் கல்வெட்டுகளை படி எடுத்து இதனை கட்டியவன் மாமன்னன் ராசராசனே என முதன் முதலாக கூறினார்.என்றாலும் 1892இல் வெங்கையாவால் பதிக்கபெற்ற தென் இந்திய கல்வெட்டுகள் என்னும் நூலின் இரண்டாம் பாகத்தில் முதல் கல்வெட்டில் இடம்பெற்று உள்ள

"பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர் கூற்றத்து
தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீ ராஜராஜேச்சரம்"

என்ற தொடர்தான் இதை சற்றும் ஐயத்திற்கு இடமின்றி உறுதி செய்தது

இன்றும் கூட இப்பெருங் கோவிலின் அற்புதமான கட்டிடகலை அமைதி, விமானத்தின் சிறப்பு ,கல்வெட்டுகளால் அறியபெருகின்ற கலை அரசியல் பொருளாதார மாண்புகள்,இறையன்பு ஆகியவற்றை விட நிழல் சாயாத கோபுரம்,வளர்கின்ற நந்தி,சாரபள்ளதிளிருந்து ஏற்ற்றபெற்ற 80 டன் நிறையுள்ள ஒரே பிரமந்திரக்கல் என்பன போன்ற உண்மையற்ற புனைந்துரைகளே பாமரர்களை மிகவும் கவருகின்றன என்றால் மிகையாகாது !!!!!!!!!!!!!!!!!!!


------------------------------------------------------------------ராஜராஜேச்சரம் வளரும் !!!!!!

Tuesday, March 13, 2012

கண்டேன் உடையார் ஸ்ரீ ராஜ ராஜ தேவரை !!!!!!!!!


உடையார் நாவலை ஒரு வழியாக முழுமையாக படித்து விட்டேன் அதில் பெரிய கோயில் முடியும் தருவாயில் இருக்கும் பொழுது அந்த கோயில் கட்ட உதவி புரிந்த அனைவரின் பெயரையும் அவசியம் குறிப்பிட வேண்டும் என்று மாமன்னர் உடையார் ஸ்ரீ ராஜ ராஜா தேவர் கூறிய படி அனைவரின் பெயரும் கல்வெட்டில் செதுக்க பட்டது அப்பொழுது தனது பெயரை நமது மாமன்னர் தொட்டு தடவி ரசித்தாராம் நம் அனைவருடைய பெயரும் இந்த சந்திர சூரியன் உள்ளவரை நிற்க போகிறது தமிழரின் நாகரிகம் பண்பாட்டை இந்த உலகமே வியந்து போற்ற போகிறது இது என் ஒருவனால் நிகழ்ந்தது அன்று ஒட்டு மொத்த தமிழ் மக்களின் உழைப்பு (ஏனென்றால் இந்த கோயில் கட்டும் பணியில் சோழர்கள் மட்டும் அல்லாது பாண்டிய தேசத்தை சேர்ந்த மக்களும் நிறையவே உழைத்து இருகின்றார்கள் என்பதால் தமிழர்கள் என்று சொல்லி இருகின்றார் ) என்று நெஞ்சுருக பேசுவதாக ஒரு காட்சி வரும் இந்த காட்சியை விளக்கி விட்டு நாவல் ஆசிரியர் பாலகுமாரன் இப்படி நம் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய மாமனார் உடையார் ஸ்ரீ ராஜ ராஜ தேவர் எழுப்பிய பெரிய கோவிலை நாம் செல்லும் போது இது ராசா ராசா மாமன்னன் நடந்த இடம் அங்கே நாமும் நடக்கிறோம் என்று பெருமை கொள்ளுங்கள் தமிழரின் பெருமை சந்திர சூரியன் உள்ளவரை பறை சாற்றும் நமது பெரிய கோவிலை எழுப்பிய நமது மாமன்னன்னை போற்றுங்கள் அப்படியே அவர் கை வைத்து தடவி பார்த்த அவருடைய பெயர் உள்ள இடத்தை அவசியம் தடவி பார்த்துவிட்டு வாருங்க அது நமது ராசா ராசா சோழனை வருடைவதை போல் நமக்குள் வரும் அந்த உணர்வை உணர்ந்து மெய் சிலிர்த்து போங்கள் அவருடை பெயர் சிவன் சன்னதி விட்டு வரும் வழியில் உள்ள படி கட்டின் அருகில் உள்ள சண்டிகேஸ்வரர் ஆலையத்தின் எதிர் புறம் இருக்கும் என்றும் குறிப்பிட்டு இருந்தார் அதை படித்த உடனே அந்த இடத்தை பார்க்க வேண்டும் என்றும் அவரின் பெயரை என் கைகளால் வருட வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் வந்தது உடனே கோவிலுக்கு சென்று அந்த இடத்தில தேடவேண்டும் என்ற ஆவல் என் மனதில் தோன்றியது ஆனால் ஒரு சிறு குழப்பம் என் மனதில் ஓடியது அது என்னவென்றால் பண்டையக்கால தமிழ் எழுத்துக்கள் என்னால் படிக்க இயலாதே என்னால் கண்டறிய முடியுமா என்ற சிறு ஐயப்பாடு என் மனதில் இருந்தாலும் ஒரு தேடுலோடும் நான் மிகவும் மதிக்கும் மிகவும் அன்பு வைத்திருக்கும் உடையார் ஸ்ரீ ராச ராச தேவர் எனக்கு தெரியாமல் போய் விடுவாரா அவர் மிது நான் வைத்து இருக்கும் அன்பு உண்மை என்றால் அவரின் பெயரை என்னால் கண்டறிய முடியும் என்ற நம்பிக்கையோடு சென்ற என்னை உடையார் ஸ்ரீ ராச ராச தேவர் கைவிடவில்லை எனக்கு அவர் காட்சி தந்தார் இதோ அவரின் பெயரை நீங்களும் பார்க்க இங்கே பகிர்ந்து கொள்கிறேன்






Sunday, August 21, 2011

Rare old photographs of Thanjavur

PAINTING OF THANJAVUR PALACE



THIRUVAIYARU
ART GALLERY THANJAVUR



PUSHPAMANDABA PADITHURAI THIRUVAIYARU


BIGTEMPLE(1850)
CHOLAN SILAI ROAD



THIRUVAIYARU AYYARAPER TEMPLE
THIRUVAIYARU AYYARAPER TEMPLE
THIRUVAIYARU AYYARAPER TEMPLE
A forge-welded Iron Cannon in Thanjavur, Tamil Nadu. This cannon was built during the reign of Raghunatha Nayak (1600 - 1645 AD), and it is said to be one of the largest cannons in the world.
THANJAVUR PALACE

KEELAVEETHI

THERKUVEETHI(SOUTH MAIN STREET)
MELAVEETHI