Saturday, October 19, 2013

தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகம் !!!!

உலகில் உள்ள சிறப்பும் பெருமையும் மிக்க நூலகங்களில் ஒன்று தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம்.சோழர் காலத்து "சரஸ்வதி பண்டாரம்" என விளங்கிய நூலகம் தஞ்சை நாயகர் காலத்தும் தொடர்ந்து விளங்கி மராட்டியர் காலத்தில் விரிந்து பெருகியது.இதனை பாதுகாத்து வளர்த்த பெருமை தஞ்சை மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோசிக்கு உண்டு (1798-1832).








அவரே இந்திய மொழிகளிலும்,ஆங்கிலம் ,பிரெஞ்சு,ஜெர்மன் உள்ளித பல மேல்நாட்டு மொழிகளிலும் உள்ள 4000 துக்கும் மேற்பட்ட நூல்களை சேகரித்து நூலகத்தில் வைத்தார்.பலவற்றில் அவரின் கையெழுத்துக்கள் உள்ளன.காசி யாத்திரை மேற்கொண்ட சரபோசி அங்கு இருந்து பல வடமொழி ஏடுகளை கொண்டு வந்தார்.இங்குள்ள சுவடிகளில் பலவற்றில் ஓவியங்கள் உள்ளன. காணற்கரிய அந்த நூல்களும் சுவடிகளும் உலகில் வேறேண்டும் இல்லாதவை.மோடி ஆவணங்களில் நூலக வளர்ச்சி நடைமுறை பற்றியப் பல செய்திகள் உள்ளன. 
                                      

                                                             

இங்கு ஓலைகளிலும் காகிதத்திலும் எழுதப்பட்ட 46667 சுவடிகள் உள்ளன,அவற்றும் 39300 வடமொழியை சேர்ந்தவை தமிழ் சுவடிகள் 3490 உள்ளன,மராட்டிய சுவடிகள் 3075 தெலுங்கு சுவடிகள் 802. பல இலக்கிய இலக்கண நாடகம் தொடர்பானவை மேலும் கஜ,அசுவ சாஸ்திர சுவடிகளும் மருத்துவ சுடிகளும் உள்ளன.

                                     
இந்நூலகத்தின் மராத்தி மொழியில் மோடி எழுத்துக்களில் எழுதப்பட்ட ஆவணங்கள் 850 கட்டுக்கள் உள்ளன,அவர்ற்றில் 2,55,000 ஆவங்கள் உள்ளன.இம் மோடி ஆவணங்களின் தமிழாக்கத்தை தமிழ் பல்கலை கழகம் வெளியிட்டு உள்ளது.மேலும் தமிழ் பல்கலையில் உள்ள இது போன்ற மோடி ஆவணக்ளை மின்படியாக்கம்( digitizing) எடுத்து ஆங்கிலம் மற்றும் தமிழில் மொழி பெயர்க்க தமிழ் பல்கலைகழகத்திற்கு மகராஷ்டிர அரசு 80 லட்சம் கொடுத்து உள்ளது.


சரஸ்வதி மகால் நூலகத்திற்கு சொந்தமாக அச்சகமும் உள்ளது.இந்த அச்சகம் மூலம் இதுவரை 500 கும் மேற்பட்ட வெளியிடுகள் வந்து உள்ளன.இதில் தமிழில் மட்டும் 200கும் மேற்பட்ட நூல்கள் வெளியிடப்பட்டு உள்ளது.1939 முதல் ஒரு பருவ இதழ் ஒன்றையும் நடத்தி வருகின்றனர்.மேலும் அருங்காட்சியகமும் நுண்பட பிரிவும் உள்ளது.


ஆங்கிலேயர்கள் தங்களது சொத்தாக நினைத்த இந்த நூலகத்தை நார்ட்டன் துரையின் உதவியோடு மீட்டவர் சிவாஜி மன்னரின் மனைவி காமாட்சியம்ம பாய் ஆவார்.மராட்டிய மன்னர் குடும்ப சொத்தாக இருந்த இந்நூலகம் 05/10/1918 முதல் பொது நூலகமாக ஆயிற்று.


நூலகத்தில் சரபோஜி பெயரும் சூட்டப்பட்டது.1983 முதல் தேசிய முகிதுவம் வாய்ந்த நிறுவனமாக அறிவிக்கப்பட்டது, மைய மாநில உதவியுடன் சிறப்பாக இயங்கி வரும் இந்நூலகத்தில் பல மொழிகளில் 42600 நூல்களை கொண்டு அறிய நூலகம் உள்ளது.நவீன வசதியுடன் பழ்ந்சுவடிகள் பாதுகாகபடுகின்றன.ஆண்டு தோறும் சரபோசி பிறந்தநாள் விழாவை சிறப்புடன் கொண்டாடபடுகிறது.


2006 ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைகழகம் இந்த நூலகத்தை தனது ஆராய்ச்சி மையமாக அங்கீகரித்தது. அதே போல் தஞ்சை தமிழ் பல்கலைகழகமும் முனைவர் பட்ட ஆய்வை சரஸ்வதி மகால் நூலகத்தில் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கியது.இன்று இந்த நூலகம் ஒரு உயர்கல்வி நிறுவனமாக திகழ்கிறது என்றால் மிகையல்ல.


காசிக்கு சென்றால் கங்கை நிராடுவது எவ்வளவு முக்கியமாக கருதப்டுகிறதோ அதை விட முக்கியம் தஞ்சை வந்தால் சரஸ்வதி மகால் நூலகத்தை பார்ப்பது Encyclopedia of Britannica இந்த நூலகம் பற்றி "The Most Remarkable Library In India" என்று குறுப்பிட்டு உள்ளது. பல மேல்நாட்டு அறிஞர்களின் புகழ்ச்சியையும் பாராடுகளையும் பெற்ற நூலகம். 


மேற்கூறிய தகவல்கள் நெஞ்சை அல்லும் தஞ்சை என்ற புத்தகத்தில் இருந்தும் சில தகவல்கள் தி ஹிந்து மற்றும் தினத்தந்தி நாளிதழ்களில் இருந்து எடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment