Saturday, October 12, 2013

தஞ்சாவூர் அரசினர் ராசா மிராசுதார் மருத்துவமனை வரலாறு !!!!

தஞ்சை நகரின் மையபகுதியில் அமைந்துள்ள பெரிய மருத்துவமனை ராசா மிராசுதார் மருத்துவமனையாகும், அரசு மருத்துவனையில் ராசா மிராசுதார் பெயர் எப்படி வந்தது ??

1875 ஆம் ஆண்டு தஞ்சையில் ஒரு மருத்துவப்பள்ளி தொடங்கப்பட்டது அந்த பள்ளிக்கு அப்போதைய பிரிட்டிஷ் அரசின் இளவரசர் அவர்களின் இந்திய வருகையை ஒட்டி இந்த பள்ளிக்கு வேல்ஸ் இளவரசர் மருத்துவப்பள்ளி என்று பெயரிடப்பட்டது(சிறப்பாக இயங்கிய இந்த பள்ளி 1933 ஆம் ஆண்டு மூடப்பட்டது ) 

பின்னர் ஹென்றி சல்லிவன் தாமஸ் தஞ்சை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற பின்னர் தஞ்சையில் ஒரு மிகபெரிய மருத்துவமனை கட்ட விரும்பினார்.அப்பொழுது தஞ்சை மராட்டிய அரச குடும்பத்தின் தலைவியை விளங்கிய சிவாஜி மன்னரின் மனைவியார் காமாட்சியம்மா பாய் தனககு சொந்தமாக இருந்த ராணி பூங்கா என்று வழங்கப்பட்ட இடத்தில 40 ஏக்கர் நிலத்தையும் ஒரு பெரும் தொகையையும் நன்கொடையாக வழங்கினார் 
திருப்பானந்தாள் காசிமடத்து தலைவர் தவத்திரு ராமலிங்க தம்பிரான் சுவாமிகள்,பூண்டி வீரையா வாண்டையார் ,கபிஸ்தலம் துரைசாமி மூப்பனார்,பொறையாறு தவசிமுது நாடார்,டி.கோபால கிர்ஷ்ண பிள்ளை போன்ற பலர் பெரும் பொருட்செலவில் பல கட்டிடங்களை கட்டி தந்தனர். இன்னும் அவர்கள் 1876 ஆம் ஆண்டு செய்த கொடிய விளக்கும் கல்வெட்டுக்கள் மருத்துவமனை பகுதிகளில் ஆங்காங்கு உள்ளன.அவர்களின் ஓவியங்களும் மருத்துவமனை முதல்வர் அறையில் உள்ளது .1876 இல் கட்டங்களின் மதிப்பு ரூ 60,000 ஆகும் பின்னர் மருத்துவமனையின் பல பகுதிகளில் 1914- 1918 முதல் உலகப்போர் வெற்றியின் நினைவாகவும் பின் வேறு பல ஆண்டுகளிலும் விரிவாக்கபட்டன.

அரசின் சார்பாக மாவட்ட ஆட்சியர் ஹென்றி சல்லிவன் தாமஸ் முயற்சி செய்தமையாலும் மராட்டிய அரசு குடும்பத்தினர் நிலமும் பொருளும் அளித்தமையாலும், தஞ்சை மாவட்ட பெருமக்கலாகிய மிராசுதார்கள் பலர் பற்பல கட்டிடங்கள் கட்ட பெரும் பொருள் வளகியமையாலும் இத் தஞ்சை மருத்துவமனைக்கு ராசா மிராசுதார் மருத்துவமனை என்று பெர்யர் வைக்கப்பட்டது. ஏறக்குறைய 138 ஆண்டுகளாக இப்பெயர் மாறாமல் வழங்கி வருகிறது.மையப்பகுதி மாவட்ட ஆட்சிதலைவர் பெயரால் தாமஸ் ஹால் என்று வழங்கப்படுகிறது 

" This hospital was built on the site presented by her Highness The Princess of Tanjore and voluntary contributions of the inhabitants of the district A.D 1879"

கோனேரிராசபுரம் மிரசுடார் கே எஸ் நாராயண சாமி அய்யர் பிராமண நோயாளிகளுக்கு மட்டும் என்ற பெயரில் தனி வார்டு கட்டி கொடுத்தார், இன்றும் அதற்குரிய விளம்பரப்பலகை இருபத்தி வியப்பிற்குரியது 

மேலும் இம்மருத்துவமனை இருக்கும் இடத்தில தான் ராஜ ராஜ சோழனின் அக்கையார் குந்தவையின் ஆதூர்சாலை(மருத்துவமனை) ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் செயல்ப்பட்டதாக சில செய்திகளும் உண்டு.

இம் மருத்துவமனையின் கீழ்புறம் ராணி கோபுரம் எனப்படும் மணிக்கூண்டு உள்ளது 1883 இல் உருவாக்கப்பட்டது 100 படிகளை கடந்து மேலே சென்றால் நான்கு புறமும் இயங்கும் அக்கால கடிகாரம் உள்ளது முன்பு ஒலித்தது ஆனால் இன்று முயரியான பராமரிப்பு இல்லாம இருகின்றது இந்த மணிகூண்டு ராஜப்பா பூங்காவில் உள்ளது


No comments:

Post a Comment