Saturday, October 19, 2013

தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகம் !!!!

உலகில் உள்ள சிறப்பும் பெருமையும் மிக்க நூலகங்களில் ஒன்று தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம்.சோழர் காலத்து "சரஸ்வதி பண்டாரம்" என விளங்கிய நூலகம் தஞ்சை நாயகர் காலத்தும் தொடர்ந்து விளங்கி மராட்டியர் காலத்தில் விரிந்து பெருகியது.இதனை பாதுகாத்து வளர்த்த பெருமை தஞ்சை மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோசிக்கு உண்டு (1798-1832).








அவரே இந்திய மொழிகளிலும்,ஆங்கிலம் ,பிரெஞ்சு,ஜெர்மன் உள்ளித பல மேல்நாட்டு மொழிகளிலும் உள்ள 4000 துக்கும் மேற்பட்ட நூல்களை சேகரித்து நூலகத்தில் வைத்தார்.பலவற்றில் அவரின் கையெழுத்துக்கள் உள்ளன.காசி யாத்திரை மேற்கொண்ட சரபோசி அங்கு இருந்து பல வடமொழி ஏடுகளை கொண்டு வந்தார்.இங்குள்ள சுவடிகளில் பலவற்றில் ஓவியங்கள் உள்ளன. காணற்கரிய அந்த நூல்களும் சுவடிகளும் உலகில் வேறேண்டும் இல்லாதவை.மோடி ஆவணங்களில் நூலக வளர்ச்சி நடைமுறை பற்றியப் பல செய்திகள் உள்ளன. 
                                      

                                                             

இங்கு ஓலைகளிலும் காகிதத்திலும் எழுதப்பட்ட 46667 சுவடிகள் உள்ளன,அவற்றும் 39300 வடமொழியை சேர்ந்தவை தமிழ் சுவடிகள் 3490 உள்ளன,மராட்டிய சுவடிகள் 3075 தெலுங்கு சுவடிகள் 802. பல இலக்கிய இலக்கண நாடகம் தொடர்பானவை மேலும் கஜ,அசுவ சாஸ்திர சுவடிகளும் மருத்துவ சுடிகளும் உள்ளன.

                                     
இந்நூலகத்தின் மராத்தி மொழியில் மோடி எழுத்துக்களில் எழுதப்பட்ட ஆவணங்கள் 850 கட்டுக்கள் உள்ளன,அவர்ற்றில் 2,55,000 ஆவங்கள் உள்ளன.இம் மோடி ஆவணங்களின் தமிழாக்கத்தை தமிழ் பல்கலை கழகம் வெளியிட்டு உள்ளது.மேலும் தமிழ் பல்கலையில் உள்ள இது போன்ற மோடி ஆவணக்ளை மின்படியாக்கம்( digitizing) எடுத்து ஆங்கிலம் மற்றும் தமிழில் மொழி பெயர்க்க தமிழ் பல்கலைகழகத்திற்கு மகராஷ்டிர அரசு 80 லட்சம் கொடுத்து உள்ளது.


சரஸ்வதி மகால் நூலகத்திற்கு சொந்தமாக அச்சகமும் உள்ளது.இந்த அச்சகம் மூலம் இதுவரை 500 கும் மேற்பட்ட வெளியிடுகள் வந்து உள்ளன.இதில் தமிழில் மட்டும் 200கும் மேற்பட்ட நூல்கள் வெளியிடப்பட்டு உள்ளது.1939 முதல் ஒரு பருவ இதழ் ஒன்றையும் நடத்தி வருகின்றனர்.மேலும் அருங்காட்சியகமும் நுண்பட பிரிவும் உள்ளது.


ஆங்கிலேயர்கள் தங்களது சொத்தாக நினைத்த இந்த நூலகத்தை நார்ட்டன் துரையின் உதவியோடு மீட்டவர் சிவாஜி மன்னரின் மனைவி காமாட்சியம்ம பாய் ஆவார்.மராட்டிய மன்னர் குடும்ப சொத்தாக இருந்த இந்நூலகம் 05/10/1918 முதல் பொது நூலகமாக ஆயிற்று.


நூலகத்தில் சரபோஜி பெயரும் சூட்டப்பட்டது.1983 முதல் தேசிய முகிதுவம் வாய்ந்த நிறுவனமாக அறிவிக்கப்பட்டது, மைய மாநில உதவியுடன் சிறப்பாக இயங்கி வரும் இந்நூலகத்தில் பல மொழிகளில் 42600 நூல்களை கொண்டு அறிய நூலகம் உள்ளது.நவீன வசதியுடன் பழ்ந்சுவடிகள் பாதுகாகபடுகின்றன.ஆண்டு தோறும் சரபோசி பிறந்தநாள் விழாவை சிறப்புடன் கொண்டாடபடுகிறது.


2006 ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைகழகம் இந்த நூலகத்தை தனது ஆராய்ச்சி மையமாக அங்கீகரித்தது. அதே போல் தஞ்சை தமிழ் பல்கலைகழகமும் முனைவர் பட்ட ஆய்வை சரஸ்வதி மகால் நூலகத்தில் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கியது.இன்று இந்த நூலகம் ஒரு உயர்கல்வி நிறுவனமாக திகழ்கிறது என்றால் மிகையல்ல.


காசிக்கு சென்றால் கங்கை நிராடுவது எவ்வளவு முக்கியமாக கருதப்டுகிறதோ அதை விட முக்கியம் தஞ்சை வந்தால் சரஸ்வதி மகால் நூலகத்தை பார்ப்பது Encyclopedia of Britannica இந்த நூலகம் பற்றி "The Most Remarkable Library In India" என்று குறுப்பிட்டு உள்ளது. பல மேல்நாட்டு அறிஞர்களின் புகழ்ச்சியையும் பாராடுகளையும் பெற்ற நூலகம். 


மேற்கூறிய தகவல்கள் நெஞ்சை அல்லும் தஞ்சை என்ற புத்தகத்தில் இருந்தும் சில தகவல்கள் தி ஹிந்து மற்றும் தினத்தந்தி நாளிதழ்களில் இருந்து எடுக்கப்பட்டது.

Saturday, October 12, 2013

தஞ்சாவூர் அரசினர் ராசா மிராசுதார் மருத்துவமனை வரலாறு !!!!

தஞ்சை நகரின் மையபகுதியில் அமைந்துள்ள பெரிய மருத்துவமனை ராசா மிராசுதார் மருத்துவமனையாகும், அரசு மருத்துவனையில் ராசா மிராசுதார் பெயர் எப்படி வந்தது ??

1875 ஆம் ஆண்டு தஞ்சையில் ஒரு மருத்துவப்பள்ளி தொடங்கப்பட்டது அந்த பள்ளிக்கு அப்போதைய பிரிட்டிஷ் அரசின் இளவரசர் அவர்களின் இந்திய வருகையை ஒட்டி இந்த பள்ளிக்கு வேல்ஸ் இளவரசர் மருத்துவப்பள்ளி என்று பெயரிடப்பட்டது(சிறப்பாக இயங்கிய இந்த பள்ளி 1933 ஆம் ஆண்டு மூடப்பட்டது ) 

பின்னர் ஹென்றி சல்லிவன் தாமஸ் தஞ்சை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற பின்னர் தஞ்சையில் ஒரு மிகபெரிய மருத்துவமனை கட்ட விரும்பினார்.அப்பொழுது தஞ்சை மராட்டிய அரச குடும்பத்தின் தலைவியை விளங்கிய சிவாஜி மன்னரின் மனைவியார் காமாட்சியம்மா பாய் தனககு சொந்தமாக இருந்த ராணி பூங்கா என்று வழங்கப்பட்ட இடத்தில 40 ஏக்கர் நிலத்தையும் ஒரு பெரும் தொகையையும் நன்கொடையாக வழங்கினார் 
திருப்பானந்தாள் காசிமடத்து தலைவர் தவத்திரு ராமலிங்க தம்பிரான் சுவாமிகள்,பூண்டி வீரையா வாண்டையார் ,கபிஸ்தலம் துரைசாமி மூப்பனார்,பொறையாறு தவசிமுது நாடார்,டி.கோபால கிர்ஷ்ண பிள்ளை போன்ற பலர் பெரும் பொருட்செலவில் பல கட்டிடங்களை கட்டி தந்தனர். இன்னும் அவர்கள் 1876 ஆம் ஆண்டு செய்த கொடிய விளக்கும் கல்வெட்டுக்கள் மருத்துவமனை பகுதிகளில் ஆங்காங்கு உள்ளன.அவர்களின் ஓவியங்களும் மருத்துவமனை முதல்வர் அறையில் உள்ளது .1876 இல் கட்டங்களின் மதிப்பு ரூ 60,000 ஆகும் பின்னர் மருத்துவமனையின் பல பகுதிகளில் 1914- 1918 முதல் உலகப்போர் வெற்றியின் நினைவாகவும் பின் வேறு பல ஆண்டுகளிலும் விரிவாக்கபட்டன.

அரசின் சார்பாக மாவட்ட ஆட்சியர் ஹென்றி சல்லிவன் தாமஸ் முயற்சி செய்தமையாலும் மராட்டிய அரசு குடும்பத்தினர் நிலமும் பொருளும் அளித்தமையாலும், தஞ்சை மாவட்ட பெருமக்கலாகிய மிராசுதார்கள் பலர் பற்பல கட்டிடங்கள் கட்ட பெரும் பொருள் வளகியமையாலும் இத் தஞ்சை மருத்துவமனைக்கு ராசா மிராசுதார் மருத்துவமனை என்று பெர்யர் வைக்கப்பட்டது. ஏறக்குறைய 138 ஆண்டுகளாக இப்பெயர் மாறாமல் வழங்கி வருகிறது.மையப்பகுதி மாவட்ட ஆட்சிதலைவர் பெயரால் தாமஸ் ஹால் என்று வழங்கப்படுகிறது 

" This hospital was built on the site presented by her Highness The Princess of Tanjore and voluntary contributions of the inhabitants of the district A.D 1879"

கோனேரிராசபுரம் மிரசுடார் கே எஸ் நாராயண சாமி அய்யர் பிராமண நோயாளிகளுக்கு மட்டும் என்ற பெயரில் தனி வார்டு கட்டி கொடுத்தார், இன்றும் அதற்குரிய விளம்பரப்பலகை இருபத்தி வியப்பிற்குரியது 

மேலும் இம்மருத்துவமனை இருக்கும் இடத்தில தான் ராஜ ராஜ சோழனின் அக்கையார் குந்தவையின் ஆதூர்சாலை(மருத்துவமனை) ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் செயல்ப்பட்டதாக சில செய்திகளும் உண்டு.

இம் மருத்துவமனையின் கீழ்புறம் ராணி கோபுரம் எனப்படும் மணிக்கூண்டு உள்ளது 1883 இல் உருவாக்கப்பட்டது 100 படிகளை கடந்து மேலே சென்றால் நான்கு புறமும் இயங்கும் அக்கால கடிகாரம் உள்ளது முன்பு ஒலித்தது ஆனால் இன்று முயரியான பராமரிப்பு இல்லாம இருகின்றது இந்த மணிகூண்டு ராஜப்பா பூங்காவில் உள்ளது


தஞ்சை கோட்டை !!!!!!




தஞ்சையில் கோட்டை பன்னெடுங்காலமாக இருந்து வந்துள்ளது. 

திருமங்கயாழ்வார் பாடலில் 

"வம்புலான் சோலை மாமதில் தஞ்சை

என்றும் கருவூறார் திருவிசைபாவில் 

"மறிதிரை வடவாற் றிடுபுனல் மதிகில்வாழ் முதலை 
ஏற்றிநீர்க் கிடங்கில் இஞ்சிசூழு தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே "

வடவாற்று நீர் தஞ்சை தஞ்சை கோட்டைக்கு வந்ததை கருவூர் தேவர் குறிப்பிடுகிறார். ராஜ ராஜ சோழன். தஞ்சை நகரை இரண்டாக பிரித்து உள்ளலாலை(City),புறம்படி (Suburban) என நகரை பிரித்து அழகாக நகரமைப்பு(Town planning) செய்தார்.உள்ளாலை கோட்டைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது.

பெருவுடையார் கோவிலை சுழ்ந்துள்ள கோட்டை சிவகங்கா கோட்டை அல்லது சின்னகோட்டை எனப்படும்.செவ்வப்ப நாயக்கர் கட்டியது. அதன் பரப்பளவு 36 ஏக்கர்.1779 இல் ஸ்வார்ட்ஸ் கட்டிய கிறிஸ்து நாதர் தேவாலயம் இக்கோட்டைக்குள் உள்ளது, அங்கு வாழ்ந்தவர்கள் சின்னக்கோட்டை கிருஸ்துவர்கள் என்று அழைக்கப்பட்டனர். துளாச காலத்தில் அவர்களுக்கு மகர்நோன்புசாவடியில் இடம் அளிக்கப்பட்டது. சிவகங்கை குளம் இக்கோட்டையில் அடங்கும்.

தஞ்சை நகரக் கோட்டை மிகப்பெரியது 530 ஏக்கர் பரப்பு உடையது. இக்கோட்டையை கருடக்கொடி என்று அழைப்பர். கருடன் வடிவில் அமைத்தால் இப்பெயர் வந்தது . இக்கோட்டையில் யாரும் பாம்பு கடித்தால் கூட மரணம் அடைவது இல்லை என்ற கதைகளும் உண்டு. கோட்டையை சுற்றி 8 காவலர் கோபுரங்கள் உள்ளன.




தஞ்சையில் 130 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிறைச்சாலை



தஞ்சையில் 130 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிறைச்சாலை வ.உ.சி., பெரியார் அடைக்கப்பட்ட இடம்:நினைவுச்சின்னமாக பாதுகாக்க வலியுறுத்தல்




தஞ்சாவூர் அரண்மனை !!!!!

தஞ்சையில் இருந்த சோழர்கால அரண்மனையை பற்றிய சரியான செய்திகளோ கல்வெட்டுகளோ செப்பேடுகளோ இல்லை ஆனால் தஞ்சையை பற்றி பாடபெற்ற சில பாடல்களில் அரண்மனையை பற்றி குறிப்பிட்டு உள்ளனர் அவை 

"இடைகெழு மாடத்து இஞ்சிசூழ் தஞ்சை " என்று கருவூறார் பாடலிலும் 

"பொன் மாளிகைத் தஞ்சை மாநகர்" என்ற அருணகிரியார் பாடல்களின் வாயிலாகவும் மாட மாளிகை தஞ்சையில் இருந்தமை நமக்கு தெளிவாகிறது. 

சோழர்கால அரண்மனை எங்கு இருந்தது என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன, செக்கடிமேடு,சீனிவாசபுரம்,அப்பாசாமி வாண்டையார் காலனியை அடுத்துள்ள பகுதியாக இருக்ககூடும் என்றும் கூறுகின்றனர். இப்போதையை அரண்மனை பகுதியாகவும் இருக்கலாம் முறையான அகழ்வாராட்சி நடத்தினால் உண்மை புலப்படும். 

ஒரு 20 ஆண்டுகளுக்கு முன் ஒரு மோசமான சம்பவம் நமது தஞ்சையில் நிகழ்ந்தது அது என்னவென்றால் 1989 ஆம் ஆண்டு தஞ்சாவூர் சீனிவாசபுறதிற்கு அருகில் உள்ள ராசராசன் நகரில் ஒரு தனியார்க்கு சொந்தமான இடத்தில வீடுகட்ட ஒப்பந்தகாரர் ஒருவர் கடைகால் தோண்டினார் அப்பொழுது 10 அடி ஆழத்திற்கு மிக நீண்ட கற்றூண் ஒன்று கல்வெட்டுகளுடன் புதைந்து இருந்தது. கல்வெட்டுகளின் முக்கியத்துவம் உணராத அந்த ஒப்பந்தகாரர் அந்த தூணை 70 துண்டுகளாக உடைத்து, கட்டுமானத்திற்கு பயன்படுத்த தயாராகிவிட்டார் அப்பொழுது இந்த தூணின் அருமை அறிந்த சிலர் அகழ்வாராய்ச்சியாளர் திரு குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களுக்கும் இந்து பத்திரிகையின் நிருபர் திரு வி .கணபதி அவர்களுக்கும் தகவல் அளித்தனர். இவர்கள் இருவரும் உடனே சென்று பார்த்து அப்போதைய தஞ்சை மாவட்ட ஆட்சியர் மச்சேந்திரநாதன் அவர்களின் உதவியுடன் உடைந்த கல் துண்டுகளை கைப்பற்றினார். பிறகு முனைவர் இரா. நாகசாமி இத்துண்டுகளை படித்து இக்கல்வெட்டின் முக்கியத்துவத்தை அறிவித்தார். தமிழக மற்றும் இந்திய தொல்லியியல் துறையினர் இக்கல்வெட்டின் துண்டுகளை படியெடுத்து பதிவுசெய்தனர், இப்பொழுது அந்த கல்தூண் தஞ்சை ராஜராஜசோழன் மணிமண்டபத்தில் உள்ள ராசராசன் அருகாட்சியகத்தில் உள்ளது. 



இதற்கு முன் கிடைத்த அனைத்து கல்வெட்டுகளும் திருகோவில்களுக்கும் மற்ற அரசு நடவடிக்கைக்கு உரிய சாசனங்கலே, ஆனால் தஞ்சையில் கிடைத்துள்ள இக்கல்வெட்டுப் பாடல்களோ ராசராசனின் புகழை மட்டுமே பாடுபவையாக உள்ளன.மேலும் அவரது பிற பட்டபெயர்களை கூறாது மும்மூடிசோழன் என்றே புகழ்கிறது.இக்கல்வெட்டு இடம்பெற்ற இந்த கல்தூண் அவனது அரண்மனையில் தான் இருந்திருக்க வேண்டும் என உறுதியாக நம்பலாம்.

இப்போதைய அரண்மனையின் பெரும் பகுதி செவ்வப்ப நாயக்கர்களால் கட்ட தொடங்கி இரகுநாத நாயக்கர்,விசயராகவா நாயக்கர் ஆகியோரார் முடிக்கப்பட்டது.விசய இரகுநாதர் காலத்தில் "விஜய விசாலம் என்றும் இரகுநாத விலாசம் என்றும் , விசயராகவன்" காலத்தில் "விசயராகவா விலாசம்" என்றும் அரண்மனை அழைக்கப்பட்டு உள்ளது.



ஆயுதமகாலும் 7 மாடி 34.8 மீட்டர் உயரமுடைய மணிமண்டபமும்


சாகித்ய ரத்நகரம், ரகுநாத நாயக்கப் யூத யமு, மன்னாருதாச விலாசம், போன்ற நூல்களில் அரண்மனைபற்றிக் கூறப்பட்டு உள்ளன.ஆயுதமகாலும் 7 மாடி 34.8 மீட்டர் உயரமுடைய மணிமண்டபமும் வெளியில் இருந்து பார்த்தல் தெரியும் வண்ணம் உயரமாக அமைக்கபெற்றது . 


சார்ஜா மாடி,கீழவீதி


கீழவீதியில் 100 அடியும் 7 மாடியும் கொண்ட சார்ஜா மாடியும்,பூசா மகாலும்,பில்லி மகாலும் 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19ஆம் நூற்றாண்டின் தொடகத்திலும் மராட்டியர் காட்டியவை,தர்பார் ஹால் நாயக்கர் காலத்தில் கட்டி மராட்டியர் காலத்தில் புதுப்பித்ததாகும்.





கல்யாணமகால், திருவையாறு 





மங்கள விலாசம், தெற்கு வீதி


இரண்டாம் சரபோசியின் மனைவிமார் தங்க திருவையாற்றில் கல்யாணமகாலும், சிவாஜியின் மனைவிமார்(42 பேர்) தங்க தஞ்சை தெற்கு வீதியில் மங்கள விலாசமும் சிறந்த அரண்மனைகலாக திகழ்ந்தன

மேற்கூறிய செய்திகள் "நெஞ்சை அல்லும் தஞ்சை" என்ற புத்தகத்தில் இருந்தும்,குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய "தஞ்சாவூர்" என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது

Saturday, July 6, 2013

ஆதித்த கரிகாலனை கொன்ற உடையார் குடி அந்தணர்களுக்கு உடையார் ஸ்ரீ ஸ்ரீ ராஜ ராஜா தேவர் அளித்த தண்டனை !!!!!!!

ஆதித்த கரிகாலனை கொன்ற உடையார் குடி அந்தணர்களுக்கு உடையார் ஸ்ரீ ஸ்ரீ ராஜ ராஜா தேவர் அளித்த தண்டனை பற்றிய கல்வெட்டு உடையார்குடியில் உள்ளது இது தற்போதைய காட்டுமன்னார்கோவில். அந்த கல்வெட்டில் கூறப்பட்டு உள்ள வாசன்கங்கள் இது தான்

"ஸ்வஸ்தி ஸ்ரீ கோராஜகேஸரிவர்ம்மர்க்கு யாண்டு 2வது வடகரை ப்ரமதேயம் ஸ்ரீ வீரநாரயணச் சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறிப் பெருமக்களுக்கு சக்ரவர்த்தி ஸ்ரீ முகம்

“பாண்டியனைத் தலைகொண்ட கரிகாலச் சோழனைக் கொன்று த்ரோஹிகளான சோம(ன்)…(இவன்) றம்பி
ரவிதாஸன பஞ்சவன் பரஹ்மாதிராஜனும் இவன்றம்பி பரமேஸ்வரனான இருமுடி சோழ ப்ரஹ்மதிராஜ்னும் இவகள் தம்பிமாரும் இவகள் மக்களிதும் இவர் ப்ராஹ்மணிமா(ர்) பேராலும் (இவகள் ப்ராஹ்மணிமா(ர்) பேராலும் (இவகள்…) றமத்தம்
பேரப்பன்மாரிதும் இவகள் மக்களிதும் இவகளுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிதும் தாயோடப் பிறந்த மாமன்மாரிதும் இவகள் உடப்பிறந்த பெண்களை வேட்டாரினவும் இவகள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் (முறி)யும் நம்மாணைக் குரியவாறு
கொட்டையூர் ப்ரஹ்ம ஸ்ரீராஜனும் புள்ளமங்கலத்து சந்ரசேகர பட்டனையும் பெரத் தந்தோம் தாங்களும் இவகள் கண்காணியோடும் இவகள் சொன்னவாறு நம்மாணைக்குரியவாறு குடியொடு குடிபேறும் விலைக்கு விற்றுத் தாலத்திடுக இவை குறு(காடி)கிழான் எழுத்தென்று இப்பரிசு வர"

உடையாற்குடிகு சக்கரவர்த்தி செல்லாமல் அவரின் ஸ்ரீமுகம் மட்டும் அனுப்பி தண்டனை நிறைவேற்ற சொல்கிறார் இதன் கருத்து "வீர நாராயணன் சதுர்வேதி மங்கலத்து பெருமக்களுக்கு சகரவர்தியில் ஸ்ரீமுகம் பாண்டியனைத் தலைகொண்ட கரிகாலச் சோழனைக் கொன்ற துரோகிகளான சோமன் இவன் தம்பி
ரவிதாஸன, பஞ்சவன், பரஹ்மாதிராஜனும் இவன் தம்பி பரமேஸ்வரனான இருமுடி சோழ ப்ரஹ்மதிராஜ்னும் இவகள் தம்பிமாரும், பிள்ளைகளும் இவர்களுக்கு பெண் கொடுத்தவர்களும் பெண்களும் இவர்கள் சமப்தபட்ட அனைவரும் அவர்களின் உடைமைகள் சொத்து அனைத்தையும் விட்டு விட்டு உடனே இந்த ஊரை காலிசெய்து வெளியேறவேண்டும் என்று பொருளில் எழுதப்பட்ட கல்வெட்டு

கருவூரார் பெயர் காரணம்.

கரூரில் பிறந்த காரணத்தாலே தான் அவரு கருவூர் தேவர் என்று நம்மில் பலர் நினைத்து கொண்டு இருகின்றோம் ஆனால் நான் உடையார் நாவலில் ஒரு செய்தியை படித்தேன் அதில் கருவூராரிடம் ஒருவன் வந்து நீங்கள் பிறந்த கருவூர் எங்கு உள்ளது???? என்று கேட்க

அதற்கு அவர் என் தாயில் கருப்பைதான் என் ஊர், என் தாய் எங்கிருந்தால் என்று எனக்கு தெரியாது அதை பற்றி நான் கவலை படவில்லை என் தாயின் ஊருக்கு நான் வந்ததும் (கருப்பையில்) அந்த ஊர் பற்றி நான் தெள்ள தெளிவாக புரிந்துகொண்டுவிட்டேன் என் தாயின் ஊரின் நான் வளர்ந்த ஒரு ஒரு நொடியும் எனக்கு நினைவு இருக்கிறது வெறும் ஆத்மாவாக அங்கு இருந்ததும் நல் ஆதமாவாக மலரவைததும் அங்குதான் உடம்பில் உள்ள அவையங்களுக்கு புத்தி கட்டளையிட்டதும் நன்றாக நினைவில் இருக்கிறது

எல்லா மனிதர்களுக்கு கருவில் இருந்தது நினைவில் இராது அதானால் அவர்கள் மனிதன்ர்கள். கருவில் வாழ்ந்த காலம் எவனுக்கு நினைவில் இருகின்றதோ அவன் தேவன். நான் சாதாரண மனிதன் அல்ல மனிதற்கு மேலே என்பதால் என்னை தேவன் என்று அழைகிறார்கள். நான் கரு(தாயின் கரு ) என்ற ஊரில் பிறந்த மனிதனல்ல தேவன் இனத்தை சார்ந்தவன் நான் சொல்லுவது சாதியை அல்ல என் நிலையை.

இதை பற்றிய உங்கள் கருத்தை பதியவும்